தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 18 ஜனவரி, 2019

தொழிலாளர் - விவசாயிகள் வர்க்க ஒற்றுமை - ஒன்றுபட்ட போராட்டமே தீர்வு

ஜனவரி 19 தியாகிகள் தினம்….! தீப ஒளி ஏந்தி உரத்து முழங்கிடுவோம்…!

தியாகிகள் தின  உறுதி மொழி ஏற்போம் << படிக்க  > >

வெள்ளி, 28 டிசம்பர், 2018

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

காலவரையற்ற வேலை நிறுத்தம் 10-12-2018 க்கு ஒத்தி வைப்பு!!!


AUAB தலைவர்களுக்கும்  தொலை தொடர்பு செயலாளருக்கும் இடையே 02-12-2018 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது .  BSNL க்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு  , ஓய்வூதிய மாற்றம் ,  BSNL வழங்கும் ஓய்வூதிய பங்களிப்பு , ஆகிய பிரச்சனைகளில் முன்னேற்றம் தெரிகின்றது.எனினும், மூன்றாவது ஊதியமாற்றம் பிரச்சனையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.இதன் நிலை தொடர்பான தொலை தொடர்பு செயலாளரின் பதிலை  AUAB தலைவர்கள் ஏற்கவில்லை .
இந்த சூழ்நிலையில் மத்திய தொலைதொடர்பு அமைச்சருடன்  விவாதிப்பதிற்கான  வாய்ப்பை உறுதி செய்வதற்காக, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைப்பது என AUAB முடிவு  செய்துள்ளது.  மத்திய தொலைதொடர்பு அமைச்சரோடு நடைபெறும் பேச்சு வார்த்தையில் பலன் கிடைக்கவில்லை என்று சொன்னால் 10-12-2018 அன்று 00 .00 மணி முதல்   நமது காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும்
பி.அபிமன்யூ, பொதுச்செயலர்

செவ்வாய், 27 நவம்பர், 2018

AUAB தலைவர்கள் மாவட்ட முழுவதும் சுற்றுப்பயணம் அட்டவணை,

03.12.2018 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி   AUAB தலைவர்கள் மாவட்ட முழுவதும் சுற்றுப்பயணம் அட்டவணை, <<படிக்க>> 

கணபதி மாவட்ட செயற்குழு முடிவுகள்

 கணபதி மாவட்ட செயற்குழு முடிவுகள் அறிக்கை  படிக்க <<< படிக்க   >>>

வெள்ளி, 9 நவம்பர், 2018

பேரணியை வெற்றியடைய செய்வோம்
AUAB தலைவர்கள் கூட்ட முடிவுகள்

AUAB  கோவை மாவட்டம்

14-11-2018  -பேரணியில் பங்கேற்போம்

தோழர்களே ! தோழியர்களே ! தோழமை வணக்கம்.

AUAB  மத்திய அமைப்பு சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் தர்ணா போராட்டங்கள் நம் மாவட்டத்தில் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.இதன் தொடர்ச்சியாக  வரும் 14-11-2018 புதன்கிழமை அன்று  ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் பேரணி கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் இருந்து துவங்கி ரேஸ்கோர்ஸ் தொலைபேசி நிலையத்தில் நிறைவடைய உள்ளது.அங்கு கோவை மாவட்ட PGM திரு.முரளிதரன் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளது. இது பற்றி இன்று நடந்த AUAB  கோவை மாவட்ட கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு 
1) AUAB  தலைவராக தோழர் ஏ.ராபர்ட்ஸ் ,மாவட்ட செயலர் NFTE BSNL அவர்களும் , கன்வீனராக தோழர்.சி.ராஜேந்திரன் ,மாவட்ட செயலர். BSNLEU  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்
2) பேரணியில்  1000 தோழர்களை பங்கேற்க வைப்பது எனவும்.இதற்காக அனைத்து கிளைகளிலும் அனைத்து சங்க பிரதிநிதிகள் இணைந்து பிராச்சாரம் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது
3) பேரணி சரியாக 14-11-2018 மாலை 04.00 மணிக்கு துவங்கி 05.00 மணிக்கு நிறைவடையும் .அங்கு சிறப்புக்கூட்டம் நடைபெறும் .பேரணியை முன்னனி தோழர்களை கொண்ட குழு வழிநடத்தும்.
தோழமையுள்ள 
ஏ.ராபர்ட்ஸ்                                                    சி.ராஜேந்திரன்
                              தலைவர்                                                         கன்வீனர்

குறிப்பு : பேரணி நோட்டீஸ் சங்க அலுவலகத்தில் உள்ளது. முன்னனி நிர்வாகிகள் மாவட்ட சங்கத்தை அணுகி பெற்றுக்கொள்ளவும்

ஆர்ப்பாட்ட நிகழ்வுகள்

BSNLEU  & TNTCWU  சங்கங்கள் சார்பாக மாவட்டத்தில் அனைத்து அலுவலகங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர்கலோடு சங்கபிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் 10க்கும் மேற்பட்ட இடங்களில் எழுச்சியோடு நடைபெற்றது.இதில் மாநில மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றினார்கள். ரூ.7000 /- போனஸ் ,விடுபட்ட சம்பளம், நடப்பு மாத சம்பளம் மற்றும் நிலுவை தொகை ஆகியவைகளை பண்டிகைக்கு முன் வழங்குவதாக  ஏற்றுக்கொள்ளப்பட்டது.விரைவில் முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்தவும் முடிவுகளை அமலாக்காத ஒப்பந்ததார்ரகள் மேல் நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது .
சி.ராஜேந்திரன் ,மாவட்ட செயலர், என்.பி.ராஜேந்திரன், மாநில அமைப்பு செயலர், எஸ்.சுப்பிரமணியம், மாநில உதவிச்செயலர்,ஏ.முகமது ஜாபர், மாவட்ட தலைவர், என்.சக்திவேல் ,மாநில அமைப்பு செயலர்,செள .மகேஸ்வரன், ஒப்பந்த ஊழியர்சங்கத்தின் நிர்வாகிகள் வடிவேல், சண்முக சுந்தரம், கல்யாணராமன் ஆகியோர் பங்கேற்று கோரிக்கையை விளக்கி உரையாற்றினார்கள்

ஞாயிறு, 4 நவம்பர், 2018

ஊழியர்களுக்கான ஊதிய மாற்ற பேச்சு வார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு தீர்வு காணும் வகையில் தலையிட CMD BSNLஇடம் வேண்டுகோள்

02.11.2018 அன்று DOT செயலாளரிடம் பேச்சு வார்த்தை முடிந்த பின் BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் NFTE பொது செயலாளர் தோழர் சந்தேஸ்வர் சிங் ஆகியோர், BSNL CMD அவர்களை சந்தித்தனர். நிர்வாக தரப்பில் வீட்டு வாடகைப்படி மாற்றத்தை வழங்க விரும்பாத காரணத்தால் ஊழியர்களுக்கான ஊதிய மாற்ற பிரச்சனையில் முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளதை அவரிடம் தெரிவித்தனர். 31.12.2016ல் இருந்ததை போன்று வீட்டு வாடகைப்படியை முடக்கும் நிர்வாகத்தின் முன்மொழிவை ஊழியர் தரப்பில் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் தலைவர்கள் CMDஇடம் சுட்டிக் காட்டினார்கள். கால தாமதமின்றி ஊதிய மாற்ற உடன்பாட்டில் கையெழுத்திடும் வகையில், BSNL CMD தலையிட்டு, நிர்வாக தரப்பு உறுப்பினர்களுக்கு பொருத்தமான வழிகாட்டுதல்களை தரவேண்டும் என இரண்டு பொது செயலாளர்களும் அவரைக் கேட்டுக் கொண்டனர். ஊழியர் தரப்பின் கோரிக்கைகளை கவனித்த BSNL CMD, இதில் ஆவன செய்வதாக தெரிவித்தார்.

AUABயின் அமைப்பு நிலை தொடர்பான முடிவுகள்

DOT செயலாளர் மற்றும் AUAB தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு மற்றும் AUABயின் அமைப்பு நிலை தொடர்பான முடிவுகள்  படிக்க

சனி, 3 நவம்பர், 2018

நவம்பர் 14 பேரணியை வெற்றிகரமாக்குவோம்! DOT செயலருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் AUAB முடிவு.

ஏற்கனவே அறிவித்தபடி 02.11.2018 அன்று மாலை DOT செயலாளர் மற்றும் AUAB தலைவர்களுக்கிடையேயான சந்திப்பு நடைபெற்றது. ஊதிய மாற்ற பிரச்சனையில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை. ஆனால் 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, ஓய்வூதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய பங்கீடு ஆகியவற்றில் சில முன்னேற்றங்கள் உள்ளன. DOT செயலருடன் நடைபெற்ற சந்திப்பிற்கு பின் நடைபெற்ற AUAB கூட்டத்தில் நவம்பர் 14 பேரணியை மிகவும் சக்தி மிக்கதாக நடத்திட முடிவெடுக்கப்பட்டது. விவரங்கள் நாளை இணைய தளத்தில் வெளியிடப்படும்.

திங்கள், 29 அக்டோபர், 2018

அணி திரள்வோம் , வெற்றிகரமாக்குவோம்


DOT செயலாளர், 02.11.2018 அன்று மாலை 05.00 மணிக்கு AUAB தலைவர்களை சந்திக்கிறார்.

DOTயின் செயலாளர் திருமிகு அருணா சுந்தரராஜன் மற்றும் AUAB தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு 02.11.2018 அன்று மாலை 05.00 மணிக்கு நடைபெறும் என BSNL கார்ப்பரேட் அலுவலகம் தெரிவித்துள்ளது. AUAB விடுத்துள்ள போராட்ட அறைகூவல்களில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். 2018, நவம்பர் 30ஆம் தேதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை எனில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்குவது என்கிற முடிவை DOTயின் செயலாளருக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
DOTயின் செயலாளருக்கும் AUAB தலைவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடப்பது என்பது உண்மையில் நல்லதொரு முன்னேற்றம் தான். ஆனால் 02.11.2018 அன்று நடைபெறக் கூடிய கூட்டத்திலேயே நமது அனைத்து கோரிக்கைகளும் தீர்த்து வைக்கப்படும் என நமது தோழர்கள் கருதி விடக்கூடாது. மத்திய அமைச்சர் கொடுத்த உறுதிமொழியின் மீது எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காமல் எட்டு மாத காலம் DOT இருந்தது என்பதுதானே நமது கடந்த கால அனுபவம். 
எனவே 3வது ஊதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, ஓய்வூதிய மாற்றம், வாங்கும் உண்மை சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்கீடு மற்றும் நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வு கால பலன்கள் தொடர்பான 2வது ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை ஒட்டு மொத்தமாக அமலாக்குவது ஆகிய நமது கோரிக்கைகளை வென்றடைவதற்கான வேலை நிறுத்த போராட்டங்களுக்கு ஊழியர்களை தயார் படுத்தும் பணியில் தங்கு தடை ஏதும் இன்றி தொடர்ந்து ஈடுபடுவோம். ஒன்று பட்ட உறுதியான போராட்டங்களே நமது கோரிக்கைகளை வென்றடையச் செய்யும். 

PGM யுடன் பேச்சுவார்த்தை முடிவுகள்

பயனுள்ள பேச்சு வார்த்தை  << நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை >>

சனி, 15 செப்டம்பர், 2018

5 வது ஊதிய குழு மாற்றம்

ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்கான இணைந்தக் குழுவின் 5வது கூட்டம்
ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்கான இணைந்தக் குழுவின் 5வது கூட்டம் அதன் தலைவர் திரு H.C.பந்த் அவர்களின் தலைமையில் 14.09.2018 அன்று நடைபெற்றது. இணைந்தக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துக் கொண்ட இந்தக் கூட்டத்தில், கடந்த கூட்டத்தில் நிர்வாகம் முன்மொழிந்த புதிய ஊதிய விகிதங்கள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது. ஒரு சில நடப்பில் உள்ள உதாரணங்களோடு புதிய ஊதிய விகிதங்களை விரிவாக பரிசீலித்ததாக தெரிவித்த ஊழியர் தரப்பு, அந்த ஊதிய விகிதங்கள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ள தக்கதாக இருப்பதாக தெரிவித்தனர். எனினும், ஊழியர் தரப்பிற்கு கிடைக்கும் நடப்பு உதாரணங்களின் அடிப்படையில், ஊதிய மாற்றங்களில் ஏதேனும் மாற்றம் தேவையெனில் ஆலோசனை தெரிவிப்பதற்கு ஒரு வார கால அவகாசம் தேவையென கேட்டுக் கொண்டனர். இந்தக் கோரிக்கையினை நிர்வாக தரப்பு ஏற்றுக் கொண்டது. இந்த இணைந்தக் குழுவின் அடுத்தக் கூட்டம் 28.09.2018 அன்று நடைபெறும். 14.09.2018 அன்று நடைபெற்ற இணைந்தக் குழுவின் கூட்டம் முடிவடைந்த பின் ஊழியர் தரப்பு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அடுத்த இணைந்தக் குழுவின் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய இதர பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்க 25.09.2018 அன்று ஊழியர் தரப்பு உறுப்பினர்களின் கூட்டத்தை மீண்டும் கூட்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது

மாவட்ட செயற்குழுக்கூட்டம் இடம் மாற்றம்


அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
 BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒப்பந்ததாரர் இது நாள் வரையிலும் சம்பளம்  வழங்காததை கண்டித்தும் ,மாநிலம் முழுவதும் பல  மாவட்டங்களில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் என 3 மாத சம்பளம் கிடைக்கப் பெறாததை கண்டித்தும் இரண்டு மாநில சங்கங்களின்  அறைகூவலின் படி காத்திருப்பு போராட்டம் 17/09/2018 காலை 10 மணி முதல்  முன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ளதால் மாவட்டச் சங்க நிர்வாகிகளும், கிளைச் செயலர்களும் மற்றும் அனைத்து முன்னனி தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
தோழமையுடன்
சி.ராஜேந்திரன்
மாவட்ட செயலர்

மாவட்ட செயற்குழுக்கூட்டம்

கணபதியில்17-09-2018 அன்று  நடைபெற இருந்த மாவட்ட செயற்குழுக்கூட்டம் ஒப்பந்த ஊழியர் போராட்டம் காரணமாக டெலிகாம் பில்டிங்கில் போராட்ட இடைவெளியில் நடைபெறும். முக்கியமான சில பிரச்சனைகள் மட்டும் விவாதிக்க வேண்டியது உள்ளதால் அனைத்து கிளைச்செயலர்களும்,மாவட்ட சங்க நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 
இப்படிக்கு
தோழமையுடன்
சி.ராஜேந்திரன்
மாவட்ட செயலர்

ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான கார்ப்பரேட் அலுவலக உத்தரவுகளை அமலாக்குக

சமீபகாலம் வரை JOINT GM(Pers) ஆக இருந்த திரு மனீஷ் குமார் அவர்கள் GM(Restg)ஆக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றுள்ளார். 13.09.2018 அன்று தோழர் P.அபிமன்யு GS BSNLEU, தோழர் பல்பீர் சிங் Pres., தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy.GS மற்றும் தோழர் அனிமேஷ் மித்ரா VP ஆகியோர் அவரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான கார்ப்பரேட் அலுவலகத்தின் உத்தரவுகள் மாநிலங்களில் அமலாக்கப் படாமல் இருப்பதை அவரது கவனத்திற்கு கொண்டு சென்றனர். இவற்றுள் குறைந்த பட்ச கூலி மற்றும் EPF அமலாக்கம் ஆகியவை மிக முக்கியமானது என்றும் அதற்கான உடனடி நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தினர். தனது ஒத்துழைப்பை உறுதி செய்த திரு மனீஷ் குமார் அவர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் எடுத்திடுக

நிறுவனத்தின் செலவினங்களை குறைக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் 30% ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென கார்ப்பரேட் அலுவலகம் கடிதம் எழுதியது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுத்து அவர்களை வியாபார பகுதிகளில் லாபகரமாக பயன்படுத்தலாம் என BSNL CMD மற்றும் DIRECTOR(HR) ஆகியோரிடம் ஏற்கனவே BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்தது. இவர்களோடு பல கட்ட விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இவர்கள் இருவரும் இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டபோதும், ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுப்பதற்கான எந்த ஒரு கடிதமும் வெளியிடப்படவில்லை. 13.09.2018 அன்று GM(SR) அவர்களை BSNL ஊழியர் சங்க தலைவர்கள் சந்தித்த போது DIRECTOR(HR) அவர்களின் உறுதி மொழியை விரைவில் அமலாக்க வேண்டும் என வற்புறுத்தினர். அவரும் இதில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உறுதி அளித்துள்ளார்.

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

BSNLக்கு பணி செய்து பட்டினி கிடப்பதா?

மாதக்கணக்கில் வராத ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை பெறும் வரை 17.09.2018 காலை முதல் மாவட்ட பொதுமேலாளர்கள் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம்- BSNLEU, NFTE, TNTCWU மற்றும் TMTCLU முடிவு

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

ஊதிய மாற்றக் குழுவின் 4வது கூட்டம்

ஊதிய மாற்றக் குழுவின் கூட்டம் 10.09.2018 அன்று கூட்டுக் குழுவின் தலைவர் திரு H.C.பந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஊழியர் தரப்பின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் நிர்வாக தரப்பு உறுப்பினர்கள் துவக்கத்திலிருந்தே எதிர்மறையாக பேசத்துவங்கினர். FITMENT FORMULAவை பொறுத்தவரை 5 அல்லது 0%க்கு மட்டுமே DOT ஏற்றுக் கொள்ளும் என்றும், 15%ஐ ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தனர். இதற்கு, 15%க்கும் குறைவான FITMENTஐ தாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஊழியர் தரப்பில் உறுதியாக கூறிவிட்டனர். எந்த ஒரு ஊழியருக்கும் STAGNATIONஆல் பாதிப்பு ஏற்படாத வகையில் ஊதிய விகிதத்தின் துவக்க நிலைக்கும், அதிகபட்ச நிலைக்கும் போதுமான அளவில் இடைவெளி இருக்க வேண்டும் என கடந்த மூன்று கூட்டங்களிலும் ஊழியர் தரப்பு தலைவர்கள் நிர்வாக தரப்பிடம் உறுதியாக தெரிவித்தனர். ஆனால் இந்தக் கூட்டத்தில் ஓய்வூதிய பங்கீட்டை தேவையில்லாமல் அதிகமான அளவில் செலுத்துவதை தவிர்க்க இந்த இடைவெளியை முடிந்த வரை குறைக்க வேண்டும் என நிர்வாக தரப்பில் வாதிட்டனர். இதற்கு ஒட்டு மொத்த ஊழியர் தரப்பும் தனது எதிர்ப்பை தெரிவித்தது. அதிகாரிகளுக்கு ஓய்வூதிய பங்கீட்டை அதிகமாக செலுத்த தயாராக நிர்வாகம் இருக்கும்போது ஊழியர்களுக்கு வழங்குவதில் மட்டும் ஏன் இவ்வளவு கவலை கொள்ள வேண்டும் என கடுமையாக வாதிட்டனர். நிர்வாகத்தின் இந்த மனநிலையை கடுமையாக சாடிய ஊழியர் தரப்பு தலைவர்கள், நிர்வாகம் மேற்கொள்ளும் இந்த இரட்டை நிலைபாட்டை ஊழியர்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் எச்சரித்தனர். அப்போது தலையிட்ட ஊதிய மாற்றக் குழுவின் தலைவர் திரு H.C.பந்த், ஊதிய மாற்றத்தில் ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் நிர்வாகத்தின் புதிய ஊதிய விகித முன்மொழிவை தெரிவிக்கும் படி GM(SR) அவர்களுக்கு அவர் வழிகாட்டினார். கீழே கொடுக்கப்பட்டுள்ள புதிய ஊதிய விகிதங்களை நிர்வாகம் இந்தக் கூட்டத்தில் கொடுத்தது.

வியாழன், 6 செப்டம்பர், 2018

இந்திய தலைநகரில் கருமேகங்களுக்கு இடையே செங்கடல்மத்திய தொலை தொடர்பு அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை அமலாக்காதது தொடர்பாக BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயலகக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

BSNL நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் தொடர்பான முக்கியமான பிரச்சனைகளின் மீது மத்திய தொலை தொடர்பு அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகள் அமலாக்கப்படாதது தொடர்பாக புது டெல்லியில் 04.09.2018 அன்று நடைபெற்ற மத்திய செயலக கூட்டம் தனது ஆழ்ந்த அதிருப்தியை தெரிவித்துக்கொண்டது. 24.02.2018 அன்று AUAB தலைவர்களை மத்திய தொலை தொடர்பு அமைச்சர் சந்தித்த போது 3வது ஊதிய மாற்றத்தை BSNL ஊழியர்களுக்கு வழங்குவதற்கான அமைச்சரவைக் குறிப்பை மத்திய அமைச்சரவைக்கு அனுப்புவதாக உறுதி அளித்தார். ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்திற்கு தேவையானவற்றை செய்வதாகவும் உறுதி அளித்தார். ஓய்வூதிய பங்கீடு தொடர்பாக மத்திய அரசாங்க உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என தொலை தொடர்பு துறை செயலாளருக்கு வழிகாட்டினார். மேலும் BSNL நிர்வாகம் கொடுத்துள்ள முன்மொழிவின் அடிப்படையில் BSNL நிறுவனத்திற்கு 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் உறுதி மொழி அளித்தார். ஆனால் உறுதி மொழி கொடுத்து ஆறு மாத காலம் கடந்த பின்பும் அந்த பிரச்சனைகளில் எந்த ஒரு முன்னேற்றமும் தெரியவில்லை. மேலும் 24.02.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில் தொலைதொடர்பு துறை செயலாளரிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசீலனைக் கூட்டம் நடத்தவும் உறுதி அளித்தார். ஆனால் AUAB தலைவர்களின் கடும் முயற்சிக்கு பின்னரும்கூட தொலை தொடர்பு செயலாளர் AUAB தலைவர்களின் சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கவில்லை. எனவே 24.02.2018 அன்று கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான வேகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய தொலை தொடர்பு அமைச்சரை இந்த மத்திய செயலகக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது