தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 12 நவம்பர், 2021

BSNL ஊழியர்களை கட்டாயமாக கழிப்பிடங்களை சுத்தம் செய்ய, கார்ப்பரேட் அலுவலகம் கடிதம் வெளியிட்டுள்ளது

 .ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரை, BSNL ஊழியர்கள், கட்டாயமாக சுத்தம் செய்யும் பணிகளை செய்ய வேண்டும் என, DoTயின் வழிகாட்டுதல்களை மேற்கோள் காட்டி, கார்ப்பரேட் அலுவலகம் இன்று(12.11.2021) கடிதம் வெளியிட்டுள்ளது. அதில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகளும் அடங்கும். மேலும் டெல்லியில் உள்ள BSNL அலுவலகங்களில் சுத்தம் செய்யும் பணிகளை மத்திய தொலை தொடர்பு அமைச்சர் பரிசோதனை செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது ஊழியர்களை கேவலப்படுத்தும் செயலாகும். இந்தக் கடிதத்திற்கு BSNL ஊழியர் சங்கம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. சுத்தம் செய்யும் பணிகளை செய்ய நிர்வாகம், ஊழியர்களை கட்டாயப்படுத்த முடியாது.


 தோழர் P.அபிமன்யு 

 பொதுச்செயலாளர்

1 கருத்து: