தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்ட மாநாடு

   BSNL ஊழியர் சங்கம்

                                    கோவை மாவட்டம்         

அறிக்கை எண் 2                                                         தேதி:19-02-2021

எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்ட மாநாடு

தோழர்களே வணக்கம் ,

            நமது 9வது மாவட்ட மாநாடு பொள்ளாச்சி மயூரா மஹாலில்  தோழர்.கே.மாரிமுத்து நினைவு அரங்கில் 12 மற்றும் 13 பிப்ரவரி 2021 ல் சிறப்பாக நடைப்பெற்றது. 12-02-2021 அன்று  முதல் நாளில் மாலை 3-00 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர்.முகமது ஜாபர் அவர்களின் தலைமையில் துவங்கிய மாநாட்டை தோழர்.சசிக்குமரன்,   மாவட்ட உதவிப்பொருளர்  அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் .மாநில அமைப்புச்செயலர் தோழர்.என்.சக்திவேல் அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.மாவட்ட செயலர் தோழர்.சி.ராஜேந்திரன் அவர்கள் மாநாட்டு அறிக்கையை அறிமுகப்படுத்தி கடந்த 27-04-2017 உடுமலை மாநாட்டில் இருந்து தற்போதைய மாநாடு வரை நடந்த நிகழ்வுகள்,இயக்கங்கள்,போராட்டங்கள்,தீர்க்கப்பட்ட பிரச்சனைகள்,தோழமை சங்கங்களின் உறவு,மத்திய ,மாநில சங்கங்களின் சாதனைகள், தீர்வு கண்ட இயக்கங்கள் மற்றும் உலக,அகில,மாநில அளவில் தற்போதைய நிலைகளை விரிவாக விளக்கி அறிமுக உரையாற்றினார்.பின் அறிக்கையின் மீதான விவாதங்களில்  9 கிளைகளின்  சார்பில் பிரதிநிதி தோழர்கள்  கலந்து கொண்டு உரையாற்றினார்கள். பின் வரவு செலவு அறிக்கை சமர்பிக்கப்பட்டது. பின் அறிக்கை மற்றும் வரவு செலவு ஏற்கப்பட்டு முதல் நாள் நிகழ்வை மாலை 06.45 மணி அளவில் இறுதியாக மாவட்ட அமைப்புச்செயலர் தோழர்.A.Y.அப்துல் முத்தலீப் அவர்கள் நன்றி கூறி முடித்து வைத்தார் முடிவடைந்தது. மாநாட்டில் தோழமை சங்கங்களில் சார்பில் தோழர்கள் ஏ.குடியரசு-DS,AIBDPA, B.காவேட்டிரங்கன்,DS-AIBSNLEA ,S.சண்முகசுந்தரம் ,DS-TNTCWU , கே.மகாலிங்கம் விவசாயி சங்கம் பொள்ளாச்சி ,ஜி.பழனிச்சாமி போக்குவரத்துக்கழகம் மாவட்ட சங்க பொறுப்பாளர் இரண்டாம் நாள் மாநாட்டில் CITU சங்கத்தின் கோவை மாவட்ட செயலர் தோழர்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்

இரண்டாம நாள்( 13-02-2021) அன்று காலை 10.30 மணி அளவில் துவங்கிய மாநாட்டில் தேசியக்கொடியை மாவட்ட அமைப்புச்செயலர் தோழர்.பி.தங்கமணி அவர்களும், சங்கக்கொடியை மாநில உதவிச்செயலர் தோழர்.எஸ்.சுப்பிரமணியன் அவர்களும் எழுச்சிமிகுந்த கோசங்களுக்கிடையே ஏற்றிவைத்தனர்.

      மாவட்ட அமைப்புச்செயலர் தோழர்.என்.ராமசாமி அவர்கள் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றினார்.

வரவேற்புக்குழு செயலர் தோழர்.ஆர்.பிரபாகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.பின் முன்னதாகவே துவங்கிய சேவை கருத்தரங்கை மாவட்ட செயலர் துவக்கி வைத்து கடந்த காலங்களில் நமக்கும் நிர்வாகத்திற்கும் இடையே உள்ள உறவுகள் ,சேவைகளில் நமது சங்கத்தின் செயல்பாடுகள் , கீழ்மட்ட அளவில் உள்ள பலவீனங்கள் மற்றும்   ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைகளில் நமது நிலைபாடு ,அவற்றில் நமது  PGM அவர்களின் சுமூகமான தலையீடு ஆகியவற்றை பற்றி உரையாற்றினார். AGM (ADMN) திரு.ஆர்.முருகேஷன் அவர்கள் சேவைகள் பற்றியும் அவற்றை பற்றி நமது தீர்வுகள் பற்றி எடுத்துரைத்தார். அதன்பிறகு உரையாற்ற வந்த நமது PGM  அவர்கள் தற்போதைய நிர்வாகத்தின் நிலைகளை பற்றியும் அவுட் சோர்ஸ் விட்ட பிறகு நமது மாவட்டத்தில் நிலவும் பலம், பலவீனம் பற்றியும், VRS 2019 க்கு முன்பும் ,அதன் பின்பும் நமது சங்கத்தின் நேர்மையான  தலையீடுகளில் உள்ள தன்மைகளில் ஒத்துழைத்து தீர்வு கண்டதையும் , ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளில் தலையீட்டு தீர்வுகண்டதையும் நினைவுகூர்ந்து சேவையை மேம்படுத்த நாம் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தையும் பற்றி கூறி சேவைக்கருத்தங்கில் உரையாற்றினார்.

அதன்பின் துவக்க உரை ஆற்றிய நமது மாநில செயலர் தோழர்                      A.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள் தற்போதைய நிர்வாகத்தின் செயல்பாடுகளையும், மத்திய   அரசின் ஊழியர் விரோதபோக்குகள் பற்றியும் , பொதுத்துறைகளையும், அரசுத்துறைகளையும் தனியார்மயப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளையும், விவசாயிகளுக்கு எதிராகவும், தொழிலாளர்களுக்கு விரோதமாகவும்  மத்திய அரசின் செயல்களை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

அடுத்ததாக சிறப்புரையாற்ற வந்த தோழர்.S.செல்லப்பா,AGS , மாநாட்டை சிறப்புடன் ஏற்பாடுகளை செய்ததற்காக பாராட்டினார்.இன்றைய அரசியல் சூழல், வேளாண் மக்களின் போராட்டங்கள் , இன்றைய சூழலில் நமது கடமைகள் , புதிய GTI திட்டம், எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும்,  போராட்டங்கள் பற்றியும்,, சென்னையில் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மத்திய செயற்குழு கூட்டம் , கூட்டுறவு சங்கத்தின் தற்போதைய  நிலைக்கு யார் காரணம் , தீர்வுக்கு நம் சங்கம் எடுத்த முயற்சிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

மதிய உணவு இடைவேளைக்கு பின் நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் கடந்த மாநாட்டிற்குப்பிறகு ஓய்வு பெற்ற மற்றும் விடுபட்ட  கிளைச்செயலர்கள், மாவாட்ட நிர்வாகிகள் ,மாநில பொறுப்பாளர்கள் பாராட்டபட்டு அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தோழர்.S.செல்லப்பா,AGS ,அவர்கள் பணி ஓய்வுபெற்ற தோழர்களை வாழ்த்திபேசினார் .தவிர வரவேற்புக்குழு உறுப்பினர்களும் பாராட்டு  பெற்றனர்.

      தோழர்.S.செல்லப்பா,AGS அவர்களின் தொழிற்சங்க பணியை வாழ்த்தி தோழர்கள்.S.சுப்பிரமணியன், மாநில உதவிச்செயலர் மற்றும், N.P.ராஜேந்திரன், மாநில அமைப்புச்செயலர், C.ராஜேந்திரன் மாவட்ட செயலர் அவர்களும் உரையாற்றினார்கள் ,தோழர்களின் அன்பு மழையில் அவர் திகைத்தார் என்றால் அது மிகையில்லை.வாழ்த்தை ஏற்ற தோழர்.S.செல்லப்பா ,AGS தனது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.மாநாட்டின் அரங்கம் தோழர்.கே.மாரிமுத்து பெயரில் அழைக்கப்பட்டதை பெருமையுடன் குறிப்பிட்டார்.மாவட்ட செயலர் CR அவர்களின் பணிகளை பாராட்டி பேசினார்.

தோழர்.என்.சக்திவேல், மாநில அமைப்புச்செயலர்  தீர்மானக் கமிட்டி சார்பாக தயாரித்த தீர்மானங்களை தோழர்.வி.சந்திரசேகரன், மாவட்ட உதவிச்செயலர் முன் மொழிந்தார் .அது ஏகமனதாக ஏற்கப்பட்டது.

1)    

மாநாட்டின் நிகழ்வுகளை தோழர்கள்.வி.கே.அன்புதேவன்,என்.குமரவேல், அடங்கிய மினிட்ஸ் குழு பதி செய்தது சிறப்பு

மாநாட்டின் முக்கிய நிகழ்வாக கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.இதற்கான முன்மொழிவை தோழர் மாவட்டசெயலர் சி.ராஜேந்திரனும் ,மாநில உதவிச்செயலர் தோழர்.எஸ்.சுப்பிரமணியன் வழி மொழிந்தார்.அந்த பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது

தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் வருமாறு

தலைவர்

P.கல்யாணராமன்,TT

திருப்பூர்

துனை தலைவர்

P.ரகுநாதன்,TT

கோவை

துனை தலைவர்

A.சின்னான்,JE

உடுமலை

துனை தலைவர்

M.முருகன்,JE

கோவை

துனை தலைவர்

V.விஜேஸ்வரி,AOS(G)

பொள்ளாச்சி

செயலர்

செள.மகேஸ்வரன்,SOA(G)

கோவை

உதவி செயலர்

C.சசிக்குமரன்,TT

கோவை

உதவி செயலர்

C.முருகானந்தன்,JE

பல்லடம்

உதவி செயலர்

A.சாஹீன் அகமது,AOS(TG)

கோவை

உதவி செயலர்

S.மனோகரன்,JE

பொள்ளாச்சி

பொருளாளர்

B.சரவணகுமார்,AOS(G)

கோவை

உதவி பொருளாளர்

A.Y.அப்துல் முத்தலீப்,TT

கோவை

அமைப்புச்செயலாளர்

V.சந்திரசேகரன்,TT

மேட்டுப்பாளையம்

அமைப்புச்செயலாளர்

G.ராஜராஜன்,JE

திருப்பூர்

அமைப்புச்செயலாளர்

K.லோகநாதன் ,TT

கோவை

அமைப்புச்செயலாளர்

S.சரத்கங்கா,JE

கோவை

அமைப்புச்செயலாளர்

R.ரகுநாதன்,TT

மேட்டுப்பாளையம்

அமைப்புச்செயலாளர்

J.அருண்குமார்,TT

திருப்பூர்

அமைப்புச்செயலாளர்

T.முருகானந்தம்,ATT

திருப்பூர்

ஆடிட்டர்

A.யாக்கூப் ஹீசைன்,OS(G)

கோவை

மொத்தத்தில் என்றும் நினைவில் நிற்கும் மாநாடாக 9 வது மாவட்ட பொள்ளாச்சி மாநாடு நிற்கும் என்பதில் திண்ணம்.

முன்னாள் மாவட்டசெயலர் தனது செயல்பாட்டுக்கு பேருதவி புரிந்த  அனைத்து தோழர்களுக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றார்.

புதிய நிர்வாகிகள் அனைவராலும் பாராட்டப்பட்டனர்.நினைவில் நிற்கும் புகைப்பட நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக மாவட்ட பொருளாளர் தோழர்.செள.மகேஸ்வரன் மாநாட்டை சிறப்பாக நடத்தி கொடுத்த பொள்ளாச்சி வரவேற்புக்குழு தோழர்களுக்கும்,அகில இந்திய உதவிப்பொதுச்செயலர் தோழர்.எஸ்.செல்லப்பா அவர்களுக்கும், தமிழ் மாநில செயலர் தோழர்.அ.பாபுராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் , மாநில சங்க நிர்வாகிகளுக்கும், மாவட்ட ,கிளை சங்க நிர்வாகிகளுக்கும், ஒப்பந்த ஊழியர்களுக்கும், மாநாட்டில் கலந்து கொண்ட கோவை மாவட்ட  PGM , AGM(ADMN), DE (POL) உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், மாநாட்டை சிறப்பாக  நடத்த நன்கொடைகளை வழங்கிய அனைத்து தோழர், தோழியர்களுக்கும் , தோழமை சங்க தலைவர்களுக்கும்,  ஓய்வூதியர் சங்கத்தினருக்கும் மாநாட்டில் எதிர்வரும் காலங்களை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் இளைய தோழர்களை தேர்ந்தெடுக்க வழிகாட்டிய சங்க இந்நாள் தலைவர்களுக்கும், ஓய்வு பெற்ற தலைவர்களுக்கும் நெஞ்சு நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு மாநாட்டை நன்றி கூறி முடித்து வைத்தார். 

 

தோழமை வாழ்த்துக்களுடன்

 

செள.மகேஸ்வரன்

மாவட்ட செயலர்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக