தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 12 நவம்பர், 2021

2022, பிப்ரவரியில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நடத்திட தொழிலாளர்களின் தேசிய கருத்தரங்கம் முடிவு

 புதுடெல்லி ஜந்தர் மந்தரில், இன்று (11.11.2021) தொழிலாளர்களின் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.  கொரோனா பெருந்தொற்று தடையின் காரணமாக, அளவான பங்கேற்பாளர்களுடன் நடைபெற்ற இந்த கருத்தரங்கை, 10 மத்திய தொழிற்சங்கங்களின் தலைவர்களும் கூட்டாக தலைமையேற்று நடத்தினர்.  தோழர் அஷோக் சிங் (INTUC), தோழர் அமர்ஜித் கவுர் (AITUC), தோழர் H.S.சித்து (HMS), தோழர் தபன் சென் (CITU) உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் பொதுச்செயலர்களும், தலைவர்களும், இந்த கருத்தரங்கத்தில் உரை நிகழ்த்தினர்.


இந்த கருத்தரங்கில் உரையாற்றிய தலைவர்கள், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல், தேசிய பணமாக்கல் திட்டம், புதிய தொழிலாளர் குறியீடுகள், கார்ப்பரேடுகளுக்கு ஆதரவான விவசாய சட்டங்கள், ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் மீதான தாக்குதல்களை கடுமையாக விமர்சித்தனர். 


விவசாயிகளின் போராட்டம் ஓராண்டு நிறைவு பெறுவதை ஒட்டி, 2021, நவம்பர் 26ஆம் தேதி ஆர்ப்பாட்டங்களை நடத்திட, இந்த கருத்தரங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.  


மேலும், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் 2022, பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ள இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திட, மாநில அளவில் இணைந்த கருத்தரங்கங்கள் நடத்திடவும், பொதுத்துறை நிறுவன தொழிற்சங்கங்களின் இணைந்த கூட்டங்களை நடத்தவும், அனைத்து தொழிலாளர்களையும் சென்று சேரும் வண்ணம் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட வேண்டுமென்றும் இந்த கருத்தரங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.


 -தோழர் P.அபிமன்யு 

 பொதுச்செயலாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக