தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

BSNL ஊழியர் சங்கம் விடுத்த உண்ணாவிரத போராட்ட அறைகூவல் மகத்தான வெற்றி

 ஜனவரி மாத ஊதியத்தை உடனே வழங்கு, உரிய தேதியில் ஊதியம் வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக BSNL ஊழியர் சங்கம் விடுத்திருந்த உண்ணா விரத போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை சட்ட விரோதம் என அறிவிக்க BSNL நிர்வாகம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. ஊழியர்களை மிரட்டுவதற்காக, ஒரு மிரட்டல் கடிதத்தையும் கார்ப்பரேட் அலுவலகம் அனைத்து CGMகளுக்கும் அனுப்பியது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு எதிராக கார்ப்பரேட் அலுவலகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட போதும், நமது கிளை, மாவட்ட மாநில சங்கங்களின் கடுமையான முயற்சிகளின் காரணமாக இந்த உண்ணாவிரதம் மகத்தான வெற்றி பெற்றதை கண்டு மத்திய மாநில, மாவட்ட  சங்கங்கள் பெருமிதம் கொள்கிறது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு பெற்ற அத்தனை நிரந்தர, ஒப்பந்த ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் கோவைமாவட்ட சங்கம் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும், பாராட்டுதல்களையும் உரித்தாக்கிக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக