தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 20 பிப்ரவரி, 2021

கேரள மாநில BSNL ஊழியர் சங்கத்தையும் வழக்கறிஞர் திரு V.V.சுரேஷ் அவர்களையும் BSNL ஊழியர் சங்கம் பாராட்டுகிறது

 IDA முடக்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்வது என BSNL ஊழியர் சங்கம் முடிவெடுத்தவுடன், அதனை கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது என முடிவு செய்தது. ஏற்கனவே, FACT தொழிலாளர் சங்கம் தொடுத்திருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பை கேரள உயர் நீதிமன்றம் வழங்கியிருந்ததே இந்த முடிவிற்கு காரணம். ஒரு சில காரணங்களுக்காக, கேரள மாநில BSNL ஊழியர் சங்கத்தின் மூலமாக, இந்த வழக்கு தொடரப்பட்டது.

இதற்காக மிகச்சிறந்த வழக்கறிஞரை ஏற்பாடு செய்ததன் மூலம், கேரள மாநில சங்கமும், அதன் மாநில செயலர் தோழர் C.சந்தோஷ் குமாரும் மிகச் சிறந்த பணியினை செய்துள்ளனர். கேரள மாநில சங்கம் எடுத்த விரைவான நடவடிக்கைகள் காரணமாக ஒட்டு மொத்த BSNL ஊழியர்களுக்கும் நிவாரணம் கிடைத்துள்ளது.

கேரள மாநில சங்கத்தையும் அதன் மாநில செயலர் சந்தோஷ் குமாரையும் மத்திய சங்கமும், தமிழ் மாநில சங்கமும் , கோவை மாவட்ட சங்கமும் மனதார வாழ்த்துகின்றன. அதே போன்று, இந்த சிறப்பான உத்தரவை பெற்று தந்த வழக்கறிஞர் திரு V.V. சுரேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக