தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

IDA முடக்கத்திற்கு எதிரான BSNL ஊழியர் சங்கத்தின் வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

 BSNL ஊழியர்களுக்கு மூன்று தவணை IDA முடக்கத்திற்கு எதிராக BSNL ஊழியர் சங்கம் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில், கேரள உயர்நீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

IDA முடக்கம், அதிகாரிகளுக்கும், சங்கம் சாராத மேற்பார்வையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஊழியர்களுக்கு பொருந்தாது என்றும் கேரள உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும், மனு தாக்கல் செய்துள்ள சங்கத்தின் உறுப்பினர்களுக்கு IDA மறுக்கப்படக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது.

தற்போது, BSNL ஊழியர்களுக்கு IDA தவணைகளை வழங்குவதை தவிர, அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை. நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன், நமது மத்திய சங்கம் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்.

உறுதியான நடவடிக்கைகள் மூலம், ஊழியர்களின் உரிமைகளை பெற்றுத்தர அயராது பாடுபடும் BSNLEUவின் மத்திய சங்கத்தை கோவை மாவட்ட  சங்கம் மனதார பாராட்டுகிறது.

நமது சங்கத்தின் இந்த சாதனையை அனைத்து ஊழியர்களிடமும் கொண்டு செல்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக