தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது
தர்ணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தர்ணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 ஜூன், 2015

தர்ணா போராட்டம் தள்ளிவைப்பு

தோழர்களே !
இன்று நமது  CGM  யுடன் தொழிற்சங்க தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சாதகமான முறையில் நிர்வாகத்திடம் இருந்து பதில் வந்துள்ளதால் 10-06-2015 அன்று நடைபெற இருந்த தர்ணா போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 12-06-2015 அன்று நடைபெறுகின்றது.

திங்கள், 16 பிப்ரவரி, 2015

மாவட்டம் தழுவிய தர்ணா

 மாவட்ட செயற்குழுவின் முடிவின் படி தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்காக 16-02-2015 அன்று கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை ஆகிய ஐந்து  மையங்களில்  மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது
கோவையில் மாவட்ட தலைவர் தோழர். கே.சந்திரசேகரன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலர். தோழர்.சி.ராஜேந்திரன், மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள்,கிளைச்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

 உடுமலை பகுதியில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு உடுமலை கிளைத்தலைவர் தோழர். ரங்கசாமி தலைமை வகித்தார். மாவட்ட உதவிச்செயலர். தோழர். சக்திவேல், கிளைச்செயலர் தோழர். மணியன் மற்றும் முன்னனி தோழர்கள் பங்கேற்றனர்.

பொள்ளாச்சியில் மாவட்ட அமைப்புச்செயலர். தோழர் தங்கமணி மற்றும் கிளைச்செய்லர்கள். பிராபகரன், மனோகரன் மற்றும் தோழர் தோழியர்கள் பங்கேற்றனர்

திருப்பூரில் நடைபெற்ற தர்ணாவில் திருப்பூர் மெயின் கிளைத்தலைவர் தோழர். வாலீசன் தலைமை வகித்தார். மாநில அமைப்புச்செயலர். தோழர். முகமது ஜாபர் துவக்கயுரை ஆற்றினார்.மாவட்டஅமைப்புச்செயலர் தோழர். ராமசாமி நன்றி கூறி முடித்துவைத்தார். மாவட்ட சங்க நிர்வாகிகள், முருகசாமி, மகேஸ்வரன்,மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்

மேட்டுப்பளையம் பகுதியில் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் ராஜாராம் , கிளைச்செயலர் .சாஹீன்,  மற்றும் தோழர், தோழியர்கள் பங்கேற்றனர் .புகைப்படங்கள் கீழே 



அணிதிரள்வோம் ! திரளாக பங்கேற்போம் !

Image result for போராட்டம் PIC. GIF
ERP -ஐ காரணம் காட்டி பல முக்கிய பிரச்சனைகள் கிடப்பில் உள்ளன. விவாதித்தும், கடிதம் தந்தும் , பலனில்லை.  .தன்னிச்சையான பல முடிவுகளை நிர்வாகம் அறிவித்து அமலாக்க துடிக்கின்றது.. சேவைகள் சம்மந்தமாக  நமது ஆலோசனைகளும் கணக்கில் கொள்ளப்படவில்லை , ஒப்பந்த ஊழியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முடிவுகளும் எடுக்கப்பட்டதாக அறிகின்றோம். எனவே நிர்வாகத்தின் இந்த தன்னியாச்சையான முடிவை கண்டித்து 09-02-2015 அன்று  மாவட்டம் முழுவதும் ஆர்ப்பட்டம் நடந்த்து.  10-02-2015 அன்று பீளமேட்டில் நடைபெற்ற மாவட்டசெயற்குழுக்கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 16-02-2015 இன்று  5 மையங்களில் [ கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், உடுமலை ] தர்ணா போராட்டம் நடைபெற இருக்கின்றது . தோழர், தோழியர்கள் திரளாக அணிதிரள கேட்டுக்கொள்கின்றோம்.

புதன், 7 ஜனவரி, 2015

தர்ணா





 
மாவட்டசெயலர்.C.R. துவக்கவுரை

மாவட்டசெயலர்.C.R. துவக்கவுரை

மாவட்டசெயலர்.C.R. துவக்கவுரை


மத்திய, மாநில அரசைச் சார்ந்த அனைத்து துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் பிஎஸ்என்எல் சேவை பயன்படுத்துவதை கட்டாயப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் திருப்பூரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.பிஎஸ்என்எல் நிறுவனத்தை முன்னேற்றவும், சேவையை விரிவுபடுத்தி சிறப்பாக செயல்படவும் தேவையான உபகரணங்களை உடனடியாக வாங்க வேண்டும்.
இரு இயக்குநர் பணியிடங்கள் உள்பட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராமப்புற தரைவழி தொலைத்தொடர்பு சேவை கொடுப்பதால் ஏற்படும் இழப்பினை ஈடுகட்ட வேண்டும். துணை டவர் நிறுவன உருவாக்கத்தைக் கைவிட வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஸ்பெக்டம் தொகை ரூ. 6 ஆயிரத்து 400 கோடியை திருப்பித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6, 7 மற்றும் 8 தேதிகளில் அகில இந்திய அளவில் தர்ணா போராட்டம் நடத்துவது என்றுபிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு முடிவு செய்திருந்தது.
அதன்படி திருப்பூரில் செவ்வாயன்று இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. என்எப்டிஇ சார்பில் ஆண்டனி மரிய பிரகாஷ், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் கே.வாலீசன் ஆகியோர் தலைமை தாங்கினர். அனைத்து சங்கங்கள் கூட்டுக்குழு அமைப்பாளர் சி.ராஜேந்திரன் இந்த தர்ணா போராட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார். இப்போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், ஏஐடியுசி சார்பில் தண்டபாணி மற்றும் ஓய்வு பெற்றபிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்சார்பில் பா.சௌந்தரபாண்டியன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
 
அகில இந்திய Forum அறைகூவலை ஏற்று இன்று தமிழகம் முழுவதும் தர்ணா வெற்றிகரமாக நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் திரளாக தோழர்கள் கலந்து கொண்டனர். சென்னை CGM அலுவலகத்தில் அனைத்து சங்க மாநிலச் செயலர்கள், அகில இந்திய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் பல மாவட்டங்களில் கையெழுத்து இயக்கங்களும் நடத்தப்பட்டுள்ளன. அதிலிருந்து சில புகைப்படங்கள்.Read | Download

வியாழன், 13 நவம்பர், 2014

தர்ணா போராட்டம்




ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கிடக்கோரியும், அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 ம் தேதிக்குள் சம்பளம் வழங்கிடக்கோரியும்,

 முறையாக ESI, PF  சலுகைகளை வழங்கிட கோரியும்,

ஒப்பந்த ஊழியர்சங்கத்தின் மாவட்டச்செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் கடந்த 11-11-2014   அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,14-11-2014 அன்று கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் மாலை 04-00 மணி அளவில் மாலை நேர தர்ணா போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. போராட்டத்தில் அனைத்து தோழர்களும் பங்கேற்று அவர்களின் போராட்டத்தை வெற்றிபெற மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.

தோழமையுடன்

சி.ராஜேந்திரன், மாவட்டசெயலர்