![]() |
மாவட்டசெயலர்.C.R. துவக்கவுரை |
![]() |
மாவட்டசெயலர்.C.R. துவக்கவுரை |

இரு
இயக்குநர் பணியிடங்கள் உள்பட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
கிராமப்புற தரைவழி தொலைத்தொடர்பு சேவை கொடுப்பதால் ஏற்படும் இழப்பினை
ஈடுகட்ட வேண்டும். துணை டவர் நிறுவன உருவாக்கத்தைக் கைவிட வேண்டும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஸ்பெக்டம் தொகை ரூ. 6 ஆயிரத்து 400 கோடியை
திருப்பித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6, 7
மற்றும் 8 தேதிகளில் அகில இந்திய அளவில் தர்ணா போராட்டம் நடத்துவது
என்றுபிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு முடிவு செய்திருந்தது.
அதன்படி திருப்பூரில் செவ்வாயன்று இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.
என்எப்டிஇ சார்பில் ஆண்டனி மரிய பிரகாஷ், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்
சார்பில் கே.வாலீசன் ஆகியோர் தலைமை தாங்கினர். அனைத்து சங்கங்கள்
கூட்டுக்குழு அமைப்பாளர் சி.ராஜேந்திரன் இந்த தர்ணா போராட்டத்தைத் தொடக்கி
வைத்துப் பேசினார். இப்போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு திருப்பூர் மாவட்டச்
செயலாளர் எம்.சந்திரன், ஏஐடியுசி சார்பில் தண்டபாணி மற்றும் ஓய்வு
பெற்றபிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்சார்பில் பா.சௌந்தரபாண்டியன் உள்ளிட்டோர்
உரையாற்றினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக