தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது
பேரணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேரணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 மார்ச், 2017

அணி திரள்வோம் கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில்



நிறுனத்தை காக்க இன்று நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்/மாநில ஆளுநர் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நம் மாவட்டத்திலும் பேரணி கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் இருந்து துவங்கி  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்ல  உள்ளது.எனவே அனைத்து தோழியர்/தோழர் களும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுகொள்கிறோம் 

புதன், 10 ஆகஸ்ட், 2016

பேரணி

இன்று 10-08-2016 நடைபெற்ற FORUM பேரணியில் அகில இந்திய பொதுச்செயலர் தோழர் .அபிமன்யூ,தமிழக தலைமை மேலாளர் திருமதி, N. பூங்குழலி, FORUM  கன்வீனர் தோழர்.செல்லப்பா,கோவை மாவட்ட முதன்மை மேலாளர். திரு.சிவராஜ், FORUM  தலைவர்கள் தோழர்.சிவக்குமார், தோழர்.செந்தூர்பாண்டியன்,தோழர். S.E.மணியன், தோழர் சி.ராஜேந்திரன், தோழர்.பிரசன்னா,தோழர்.வேலுச்சாமி,தோழர்,சக்திவேல் மற்றும் 400 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்ட பேரணியின் முடிவில் ரேஷ்கோர்ஸ் தொலைபேசிநிலையத்தில் சிறப்புகூட்ட்த்துடன் முடிவு பெற்றது






செவ்வாய், 21 ஜூலை, 2015

ஒப்பந்த ஊழியருக்கு குறைந்த பட்ச கூலி ரூ.15,000/- கோரி 29.07.2015ல் பேரணி

தமிழகத்தில் உள்ள ஒப்பந்த ஊழியர்களின் 

குறைந்த பட்ச கூலியை 15,000 ரூபாயாக உயர்த்த 

வலியுறுத்தி தமிழகத்தில் 7 மையங்களில் பேரணி 

 Read |   Download

புதன், 25 பிப்ரவரி, 2015

இன்று நடைபெற்ற டெல்லி பேரணியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்




டெல்லி பேரணிக்காக...

BSNLஐக் காப்போம் - கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட 1 கோடி கையைழுத்துக்களை இந்தியப் பிரதமரிடம் ஒப்படைப்பதற்காக இன்று டெல்லியில் நடைபெற உள்ள பேரணியில் கலந்து கொள்வதற்காக நமது மாவட்டத்தில் இருந்து 4  தோழர்கள் டெல்லி நோக்கிப் பயணப்பட்டிருக்கிறார்கள்

வெள்ளி, 13 டிசம்பர், 2013

12/12/13 நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் BSNLEU தலைவர்கள்


தில்லியை திணறடித்த தொழிலாளர் பேரணியில் ஒரு பகுதி.



 
                                  சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்திய தொழிற் சங்கங்களும், மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள், வங்கி, இன்சூரன்ஸ் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் சம்மேளனங்கள் விடுத்த அறைகூவலுக்கிணங்க பல லட்சக்கணக்கான தொழிலாளர்களும் ஊழியர்களும் தில்லி ராம் லீலா மைதானத்திலிருந்து நாடாளுமன்ற வீதி நோக்கி நடத்திய பிரம்மாண்டமான பேரணியால் தில்லி சிவந்தது. நாடு முழுதும் இருந்து தொழிலாளர்கள் டிசம்பர் 8 இலிருந்தே தில்லியை முற்றுகையிடத் தொடங்கி விட்டனர்.தில்லி, நாடாளுமன்ற வீதியினருகே அமைந்துள்ள ஜந்தர் மந்தரில் 9ஆம் தேதியிலிருந்தே பல்வேறு சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தர்ணா போராட்டங்கள் நடைபெறத் துவங்கிவிட்டன. வங்கி ஊழியர் சங்கங்கள், கிராமிய வங்கி ஊழியர்கள், அஞ்சல் துறை ஊழியர்கள் ஆகியோர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். கூடுதலாக புதுச்சேரி, ஆங்கிலோ பிரெஞ்சு தொழிலாளர்களும் தங்கள் ஆலை நவீனப்படுத்தப்பட வேண்டும் என்று முழக்கமிட்டார்கள். நாடு முழுதும் பணியாற்றும் மின் துறை ஊழியர்களும் எரிசக்தி உரிமைமனித உரிமை என்பதை வலியுறுத்தி சிறப்பு மாநாடு நடத்தினார்கள்.அதேபோன்று தலித்/பழங்குடியினருக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளின்போது அவர்களுடைய மக்கள் தொகை விகிதாசாரத்திற்கேற்ப துணைத் திட்டத்தின்கீழ் பட்ஜெட் செலவினங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இன்று (வியாழன்) அன்று நடைபெற்ற பேரணியில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச, எச்எம்எஸ், யுடியுசி உட்பட அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்கள் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களும், மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்களின் ஊழியர்களும், அங்கன்வாடி ஊழியர்களும், இன்சூரன்ஸ் மற்றும் வங்கிஊழியர்களும் ஆண்களும் - பெண்களும் பல லட்சம் பேர் பங்கேற்றார்கள்.பேரணியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, வட கிழக்கு மாநிலங்கள் உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களையும் பார்க்கமுடிந்தது. குறிப்பாக பாதுகாப்புத் துறை, தணிக்கை மற்றும் கணக்குத் துறை, சுங்கத்துறை, உருக்குத் தொழிலாளர்கள், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், ரயில்வே மற்றும் டெலிகாம் ஊழியர்கள் முழுமையாக இப்பேரணியில் பங்கேற்றதைப் பார்க்க முடிந்தது. 
நன்றி :- தீக்கதிர்