தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 12 மார்ச், 2017

சிறப்புமேளக்காள் விபரங்கள்

கோவை மாவட்டத்தில் மேளாக்களில் பங்குபெறும் தோழர்களின் விபரங்கள்


வியாழன், 9 மார்ச், 2017

அணி திரள்வோம் கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில்நிறுனத்தை காக்க இன்று நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்/மாநில ஆளுநர் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நம் மாவட்டத்திலும் பேரணி கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் இருந்து துவங்கி  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்ல  உள்ளது.எனவே அனைத்து தோழியர்/தோழர் களும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுகொள்கிறோம் 

செவ்வாய், 7 மார்ச், 2017

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்மகளிர் தின வரலாற்றின்  மிக முக்கிய மூன்று அம்சங்கள்
1910 ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் மார்க்சிய போராளி கிளாரா ஜெட்கின் தலைமையில் நடைபெற்ற சோஷலிஸ்ட் பெண்கள் மாநாட்டுப் பேரணி இது.
‘உலக மகளிர் தினம்’ பற்றி ’1857 மார்ச் 8 சம்பவம்’ என்பது உள்ளிட்ட கற்பனைக் கதைகளே வரலாறு என்று கூறப்பட்டு வருகின்றன. உண்மையான வரலாற்றின் மிக முக்கிய மூன்று அம்சங்கள் வருமாறு :
1910 ம் ஆண்டில், டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகனில் ’ உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு ‘ நடைபெற்றது. மார்க்சியவாதியான கிளாரா ஜெட்கின் தலைமை தாங்கினார். கிளாரா ஜெட்கின் உள்ளிட்ட தோழர்கள் சிலரின் முன்மொழிவின்படி ‘மகளிர் தினம்’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "அனைத்துத் தேசிய இனங்களையும் சேர்ந்த சோஷலிஸ்ட் பெண்கள், ஒரு தனிச் சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சமூகப் பிரச்சனைகள் பற்றிய சோஷலிசக் கண்ணோட்டத்துடன், பெண்கள் பிரச்சனை முழுவதுடனும் வாக்குரிமைக் கோரிக்கையை இணைத்து, விவாதிக்க வேண்டும்" என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது. அதன்படி அடுத்த ஆண்டு முதல் பல்வேறு தேதிகளில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
1917 மார்ச் 8 அன்று ரஷ்யாவில் பெண் தொழிலாளர்கள் புரட்சியைத் தொடங்கினார்கள். மற்ற உழைக்கும் மக்களும் இணைந்தார்கள். லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவாகக் களம் இறங்கின. எட்டு நாட்களில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டது. இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. நவம்பர் மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் உலகின் முதல் சோஷலிஸ்ட் புரட்சி நடந்து, லெனின் தலைமையில் புதிய அரசு அமைந்தது. எல்லார்க்கும் எல்லாம், ஆண்-பெண் சமத்துவம் என்ற நிலை பெருமளவில் நிலைநாட்டப்பட்டது.
1921 ம் ஆண்டில் ‘கம்யூனிஸ்ட் பெண்கள் அகிலத்தின்’ மாநாடு மாஸ்கோவில் நடந்தது. ரஷ்யப் பெண் தொழிலாளர்கள் 1917 மார்ச் 8 அன்று தொடங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க புரட்சியை நினைவு கூறும் வகையில், இனிமேல் மகளிர் தினத்தை நிரந்தரமாக மார்ச் 8 அன்று நடத்துவது என்று மாநாடு முடிவு செய்தது. அது முதல் மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

வெள்ளி, 20 ஜனவரி, 2017

மத்திய மாநில அரசுகளே! தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கொடு!!!

தமிழர்களின் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்துள்ள ஜல்லிக்கட்டு விஷயத்தில் அரசியல் செய்யும் ஆட்சியாளர்களுக்கு எதிரான இளைஞர்களின் எழுச்சி! வெல்லட்டும் இளைஞர்களின் போராட்டம்!! ஆதரவுக் கரம் கொடுப்போம்!
இன்று கோவை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அகில மாநாட்டு நிகழ்வுகள்

அகில இந்திய மாநாட்டு நிகழ்வுகள்  மாவட்ட சங்க அறிக்கை எண் 48 (படிக்க இங்கே கிளிக் செய்யவும்

செவ்வாய், 17 ஜனவரி, 2017

மீண்டும் ஆரம்பித்துவிட்டது ஊதிய பிரச்சனை

.கடந்த சில மாதங்களாக ஊதிய பிரச்சனை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஒப்பந்த ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதனால் 18--01-2017 அன்று மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்திருந்தோம்.இந்நிலையில் நிர்வாகமும், ஒப்பந்ததாரரும்  அனைத்து பிரச்சனைகளும்  வரும் 20-01-2017 க்குள் தீர்வு காணப்படும் என உறுதி அளித்துள்ளார்கள். பிரச்சனைகள் தீர்வு ஏற்படாவிடில் 20-01-2017 க்குப்பின் மாவட்ட அளவில் போராட்டங்கள் தவிர்க்க இயலாது என்று நாம் உறுதிபட தெரிவித்துள்ளோம்.தோழர்கள் அமைதிகாக்க வேண்டுகிறோம்

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

பத்திரிக்கை செய்தி

மத்திய அரசை எதிர்த்துப் போராடினாலும் சேவையிலும் கவனம் செலுத்த வேண்டும்
பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு டி.கே. ரங்கராஜன் வேண்டுகோள்
http://epaper.theekkathir.org/epapers/1/1/2017/1/1/files/News_193581.jpg

சென்னை,டிச.31-
நிறுவனத்திற்கு எதிரான அரசின்கொள்கைகளை எதிர்த்துப் போராடும் அதேவேளையில் பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றுபிஎஸ்என்எல் ஊழியர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கேட்டுக்கொண்டார்.சென்னையில் சனிக்கிழமை (டிச.31) துவங்கிய பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் (பிஎஸ்என்எல்இயு) 8வது அகில இந்திய மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவருமான அவர் பிரதிநிதிகளை வரவேற்றுப்பேசியது வருமாறு: அகில இந்திய மாநாடு நடைபெறும் சென்னை மாநகரம் உழைக்கும் வர்க்கத்தின் வரலாற்றில் முக்கியமான நகரமாகும். இந்த நகரில் இருந்த பின்னி ஆலையில் சென்னை தொழிலாளர் சங்கம் (எம்எல்யு) தொடங்கப்பட்டது.
இதே நகரில் தான்1923ல் இந்தியாவிலேயே முதல்முதலாக மே தினம் கொண்டாடப்பட்டது. அத்தகைய பெருமை வாய்ந்த நகரில் தான் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநாடு நடைபெறுகிறது.நாட்டு மக்களுக்கு தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதில் பிஎஸ்என்எல் முக்கியமான பங்கை ஆற்றி வருகிறது. நாட்டில் எப்போதெல்லாம் இயற்கை சீற்றங்கள் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் பிஎஸ்என்எல் ஆற்றியபங்கு பாராட்டத்தக்கது. சென்னையில் கடந்தாண்டு டிசம்பர்மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவைகளை நிறுத்திக்கொண்டு ஓட்டம்பிடித்தன.
ஆனால் நெருக்கடியான நேரத்திலும்பிஎஸ்என்எல் மீட்பு மற்றும் நிவாரணப்பணிக்காக அளப்பரிய சேவையை செய்தது. விசாகப்பட்டினம் நகரை புயல் தாக்கியபோதும் காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டபோதிலும் பிஎஸ்என்எல் சிறப்பாக செயல்பட்டது.எனவே பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தொடர்ந்து பொதுத்துறையாகவே பாதுகாப்பது அவசியமாகும். ஆனால் மத்திய அரசு மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களோடு சமமாகப் போட்டிபோடுவதற்கான வாய்ப்பை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்க மறுத்து வருகிறது.
இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் மொபைல் போன் சேவையைத் தொடங்க அரசு 1995 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 2002ல் தான் அனுமதி வழங்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மட்டுமல்ல 1999 ஆம் ஆண்டு இருந்த வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியது. அந்நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமக்கட்டணத்தை பாஜக அரசு தள்ளுபடி செய்தது.பிஎஸ்என்எல் நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையை விரிவாக்கவும் இணையதள சேவையைத் தரமாக வழங்கவும் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடுத்தடுத்துவந்த அரசுகள் முட்டுக்கட்டை போட்டன.
நிறுவனத்திற்குத் தேவையான சாதனங்களை கொள்முதல் செய்யக்கோரி தொடர்ந்து தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்டுப் போராடி வருகின்றன. பங்கு விலக்கல்,தன்விருப்ப ஓய்வு திட்டம் உள்பட பல்வேறு பிரச்சனைகளில் தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்டு தீவிரமான போராட்டங்களை நடத்தியுள்ளன. அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைப்பதில் பிஎஸ்என்எல்இயு குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றிவருகிறது.அரசின் கொள்கைகளை எதிர்த்துப் போராடும் அதே வேளையில் பொதுமக்களுக்குத் தரமான சேவையை வழங்குவதிலும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தீவிர கவனம் செலுத்தவேண்டும்.
பொதுமக்களுடனான உறவை மேம்படுத்தும்வகையிலும் சேவையில் முன்னேற்றம் காணும் வகையிலும் நிர்வாகமும் தொழிற்சங்கமும் இணைந்து மேற்கொண்டுள்ள பல்வேறு முன்முயற்சிகள் பாராட்டத்தக்கவை.நிறுவனத்தின் சந்தையிடல் செயல்பாடுகளில் ஊழியர்களும் இணைந்ததால் பிஎஸ்என்எல் சாதனங்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.எனவே இந்தப் பின்னணியில் சென்னையில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பலப்படுத்தவும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளில் வெற்றி காணவும் வருங்காலத்திற்கான பாதையை திட்டமிடவும் விவாதிக்கப்படும் என்று நம்புகிறேன்.இவ்வாறு டி.கே.ரங்கராஜன் பேசினார்.


வெள்ளி, 30 டிசம்பர், 2016

சங்கமிப்போம் சென்னையில் புறப்படு தோழா
அகில இந்திய மாநாடு


பொதுச்செயலரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

ரிலையன்சுக்கு விளம்பரத் தூதராக இருக்கிறார் மோடி


http://epaper.theekkathir.org/epapers/1/1/2016/12/30/files/News_193351.jpg

சென்னை, டிச. 29-
பி.எஸ்.என்.எல். எம்ளாயீஸ் யூனியன் 8வது அகில இந்திய மாநாடு டிசம்பர் 31ம் தேதி துவங்கி ஜனவரி 3ம் தேதி வரை சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது.இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.அபிமன்யூ வியாழனன்று (டிச. 29) செய்தியாளர்களிடம் கூறியதாவது:அகில இந்திய தலைவர் பல்பீர் சிங் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவர்- மேலாண் இயக்குநர் அனுபம் ஸ்ரீவஸ்தவா, பி.எஸ்.என்.எல். மனிதவளத் துறை இயக்குநர்சுஜாதா டி.ரே மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சேவையை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளோம்.கடந்த 7 வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வந்த இந்நிறுவனத்தை வளரவிடாமல் முடக்கியது அரசுதான் என்றுஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தது உண்மை. 2007ஆம் ஆண்டுமுதல் 2013ஆம் ஆண்டு வரை நெட் ஒர்க்குக்கு தேவையான கருவிகளை வாங்க விடாமல் அரசு தடுத்தது. 4.5கோடி புதிய செல்போன் இணைப்புகள் வழங்குவதை அமைச்சராக இருந்த .ராசா தன்னிச்சையாக ரத்து செய்தார்.
அதேபோல் 2010ஆம் ஆண்டு 9 கோடி இணைப்புகளுக்குத் தேவையான புதிய கருவிகள் வாங்குவதை உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது.8,300 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய பிஎஸ்என்எல் நிறுவனம் அதிகாரிகள் - ஊழியர்கள் இணைந்து செயல்பட்டதன் காரணமாக 2015-16ஆம் ஆண்டு 3,000 கோடி ரூபாயாக குறைந்தது. இந்நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக தனியார் நிறுவனங்களை பாஜக அரசு மேம்படுத்துகிறது. இதற்கெதிரான பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். நிறுவனத்தின் சரிவைத்தடுக்க அதிகாரிகளும் ஊழியர்களும் வாடிக்கையாளர்களை ஈர்க்க பேருந்துநிலையங்கள், சந்தை உள்ளிட்ட பகுதிகளில் சிம் கார்டுகளை விற்பனை செய்தோம். ஒரு நிறுவனத்தில் இருந்து அதே எண்ணில் மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் திட்டத்தில் 3.2 லட்சம் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறியிருக்கிறார்கள்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருக்கிறார் பிரதமர் மோடி. ஒட்டுமொத்த அரசுஇயந்திரமும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. இலவச ஜியோ சிம் வந்த பிறகு பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு எந்தநஷ்டமும் இல்லை. மாதா மாதம் இணைப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ரிலையன்ஸ் நிறுவனம் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஜியோவை அறிமுகப்படுத்தியது. ஆனால் அந்தமாதம் மட்டும் பி.எஸ்.என்.எல். 2 லட்சத்து 50 ஆயிரம் புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஜனவரி 1ம் தேதி முதல் 350 ரூபாய் கட்டணத்தில் இலவச வாய்ஸ் கால் மற்றும் 1 ஜிபி டேட்டா வழங்க உள்ளது. தற்போது புதிய கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.
புதிதாக 20 ஆயிரம் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன.அரசின் கொள்கைகளுக்கு எதிராகபோராடும் அதே நேரத்தில் இந்நிறுவனத்தைப் பாதுகாக்க தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தி வருகிறோம். நிரந்தரத் தொழிலாளர்கள் 2.25 லட்சம் பேரும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1 லட்சம் பேரும் வேலை செய்கிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச கூலி 90 விழுக்காடு இடங்களில் அமலாகவில்லை.
ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி தொகையை ஒப்பந்ததாரர்கள் செலுத்தவில்லை.இந்த மாநாட்டில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலை குறித்தும், மென்மேலும் நிறுவனத்தை வலுப்படுத்துவது குறித்தும், 2017ஆம் ஆண்டு அமல்படுத்த வேண்டிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளோம்.
சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் .கே.பத்மநாபன் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றுகிறார். வரவேற்புக் குழு தலைவர் டி.கே.ரங்கராஜன் எம்பி,மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அகில இந்திய செயலாளர் எம்.கிருஷ்ணன், அகில இந்திய இன்சூரன்ஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.ரமேஷ், அகில இந்திய ஓய்வூதியர் சங்க பொதுச் செயலாளர் கே.ஜி.ஜெயராஜ், ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் அனிமேஷ் மித்ரா உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்ற உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.இச்சந்திப்பின் போது மாநிலத் தலைவர் எஸ்.செல்லப்பா, உதவிச் செயலாளர் எஸ்.சுப்ரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
(.நி)