தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 16 பிப்ரவரி, 2015

மாவட்டம் தழுவிய தர்ணா

 மாவட்ட செயற்குழுவின் முடிவின் படி தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்காக 16-02-2015 அன்று கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை ஆகிய ஐந்து  மையங்களில்  மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது
கோவையில் மாவட்ட தலைவர் தோழர். கே.சந்திரசேகரன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலர். தோழர்.சி.ராஜேந்திரன், மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள்,கிளைச்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

 உடுமலை பகுதியில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு உடுமலை கிளைத்தலைவர் தோழர். ரங்கசாமி தலைமை வகித்தார். மாவட்ட உதவிச்செயலர். தோழர். சக்திவேல், கிளைச்செயலர் தோழர். மணியன் மற்றும் முன்னனி தோழர்கள் பங்கேற்றனர்.

பொள்ளாச்சியில் மாவட்ட அமைப்புச்செயலர். தோழர் தங்கமணி மற்றும் கிளைச்செய்லர்கள். பிராபகரன், மனோகரன் மற்றும் தோழர் தோழியர்கள் பங்கேற்றனர்

திருப்பூரில் நடைபெற்ற தர்ணாவில் திருப்பூர் மெயின் கிளைத்தலைவர் தோழர். வாலீசன் தலைமை வகித்தார். மாநில அமைப்புச்செயலர். தோழர். முகமது ஜாபர் துவக்கயுரை ஆற்றினார்.மாவட்டஅமைப்புச்செயலர் தோழர். ராமசாமி நன்றி கூறி முடித்துவைத்தார். மாவட்ட சங்க நிர்வாகிகள், முருகசாமி, மகேஸ்வரன்,மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்

மேட்டுப்பளையம் பகுதியில் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் ராஜாராம் , கிளைச்செயலர் .சாஹீன்,  மற்றும் தோழர், தோழியர்கள் பங்கேற்றனர் .புகைப்படங்கள் கீழே கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக