தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 23 செப்டம்பர், 2019

முதலைப் பட போஸ்டரும், முழுப் பூசணிக்காயும்

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கில்லாடிகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் சோறே இல்லாத வெறும் தட்டில் முழு பூசணிக்காயை மறைக்கும் அசகாய சூரரைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? அவர் தான் C.K.மதிவாணன்.
சென்னை டெலிகாம் சொசைட்டியில் ஊழலே நடக்க வில்லையாம்! ஊழல் நடப்பதாகக் கூறி BSNLEU பொய் பிரச்சாரம் செய்ததும்; சொசைட்டிக் கட்டிடத்தை ஒரு முதலை விழுங்குவதைப் போன்ற போஸ்டர் வெளியிட்டதாலும் தான் BSNLEU தோற்றுவிட்டதாம்! எப்படி இருக்கிறது கதை?
சென்னை தொலைபேசியில் NFTE ஜெயித்த கதையினை நாம் சொல்கிறோம். TEPU சங்கத்திற்கு சென்னை தொலைபேசியில் சந்தா கொடுக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 285. ஆனால் இந்த மாநிலத்தில் TEPU சங்கம் பெற்ற வாக்குகள் வெறும் 23 மட்டுமே. NFTE மற்றும் TEPU சங்கங்களுக்கு இடையே உருவான கள்ளக் கூட்டணியின் விளைவாக TEPUவின் 262 வாக்குகள் NFTEக்கு ட்ரான்ஸ்பர் ஆகி உள்ளன. இதே போன்ற கள்ளக் கூட்டணியின் காரணமாக SEWAவின் 182 வாக்குகளும் NFTEக்கு ட்ரான்ஸ்பர் ஆகி உள்ளன.
அதாவது சென்னை டெலிகாம் சொசைட்டியில் உள்ள NFTE, TEPU மற்றும் SEWA ஆகியோரின் கள்ளக் கூட்டணி, தேர்தலிலும் தொடர்ந்த காரணத்தினாலேயே, NFTE சென்னை தொலைபேசியில் வெற்றியடைந்திருக்கிறது.
உண்மை இவ்வாறு இருக்க, சொசட்டியில் ஊழல் நடப்பதாக பொய் பிரச்சாரம் செய்த காரணத்தாலேயே BSNLEU தோற்றுவிட்டது என்று பிரச்சாரம் செய்யும் C.K.மதிவாணன், வெறு தட்டில் முழு பூசணிக்காயை மறைக்கும் பலே கில்லாடி தான் அல்லவா. “தெருவில் குறைக்கும் சொறி நாய்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று C.K.மதிவாணன், BSNLEUவைப் பற்றியும், அதன் உதவிப் பொதுச்செயலாளர் தோழர் S.செல்லப்பா அவர்களைப் பற்றியும் தனது வெப்சைட்டில் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் ‘தெருவில் திரியும் சொறி நாய்’ யார் என்பது ஊழியர்களுக்கு தெரியும். நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக