தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

சூரியனை பார்த்தும் குரைக்கும் நாய்…..

சூரியனை பார்த்து ஒரு நாய் குரைக்கிறது என்றால், அந்த நாய்க்கு பைத்தியம் பிடித்திருக்கிறதே என்று பார்ப்பவர்கள் அதன் மீது பரிதாபம் மட்டுமே கொள்வார்கள். C.K.மதிவாணன் மீண்டும் அந்த நாயை போல நடந்துக் கொள்கிறார். BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளரை பீதியடைய வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

பொதுத்துறை நிறுவனங்களில், ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்ற தேர்தல்களில், தொடர்ச்சியாக ஏழாவது முறையாக வெற்றி பெற்ற ஒரே தொழிற்சங்கமான BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள். அதே சமயம் இந்த ஏழு தேர்தல்களிலும் தொடர்ந்து தோல்வியடைந்திருக்கும் சங்கத்தை சார்ந்த கோமாளி மதிவாணன், தோழர் P.அபிமன்யு அவர்களை பார்த்து பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்துகிறார்.

நடந்து முடிந்த 8வது சங்க அங்கீகார தேர்தலில், அதிகபட்சமாக 48,127 வாக்குகளைப் பெற்று, BSNL ஊழியர் சங்கம் இந்த முறையும், முதன்மை சங்கமாக வெற்றி பெற்றுள்ளது. தற்போதுள்ள அனைத்து விதிகளின் படியும், BSNL ஊழியர் சங்கம் முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்ற அந்தஸ்தை பெறவேண்டும். ஆனால், BSNL ஊழியர் சங்கத்தை விட 8,995 வாக்குகளை குறைவாகப் பெற்ற NFTE சங்கத்திற்கும், BSNL ஊழியர் சங்கத்திற்கு சரிசமமான அந்தஸ்து வேண்டும் என்று, இந்த மதிவாணன் கேட்கிறார். அவர் கேட்டுக் கொண்டே இருக்கட்டும். அதனை முடிவு செய்ய வேண்டியது நிர்வாகம் தான்.

தேர்தல் முடிவுகள் BSNL ஊழியர் சங்கத்திற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக C.K.மதிவாணன் பிதற்றுகிறார். ஆனால் NFTE சங்கத்திற்கு தான் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அருவருக்கத்தக்க கூட்டணிகளை அமைத்துக் கொண்டு, முதன்மை சங்கமாக வரவேண்டும் என பகல் கனவு கண்டுக் கொண்டிருந்தது, NFTE சங்கமே. மீண்டும் ஒரு முறை, BSNL ஊழியர்கள், வெற்றி மகுடத்தை BSNL ஊழியர் சங்கத்திற்கே சூட்டியதன் மூலம், NFTEயின் முகத்தில் ஓங்கி அறைந்துள்ளனர்.

NFTE, தனது தளத்தை விரிவுபடுத்தியதாக மதிவாணன் பீற்றிக் கொள்கிறார். உண்மை என்ன? வேலை நிறுத்தங்களை தொடர்ச்சியாக உடைக்கும் வேலையை பார்க்கும் ஒரு சங்கத்தோடு, புறக்கடை வழியாக ஒரு அருவருக்கத்தக்க கூட்டணியை உருவாக்கியதன் மூலமே NFTE தனது வாக்குகளை அதிகரித்துள்ளது. 2018ல், டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தின் போதும், பிப்ரவரி, 2019ல் நடைபெற்ற மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தின் போதும், காவல் துறையை அழைத்து, இந்த வேலை நிறுத்தத்தை உடைக்க வேண்டும் என நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்தது அமைப்போடு தான் அவர்கள் கூட்டணி வைத்திருந்தனர். ஒரு சில வாக்குகளுக்காக NFTE சங்கம், இந்த அமைப்போடு, புறக்கடை வழியாக கூட்டணி அமைத்தது. இதை விட தரம் தாழ்ந்து NFTE சங்கத்தால் செயல்பட முடியாது. அது தனது செங்கொடியை தூக்கி எறிந்து விட்டு இதற்கு மேல் நீலக்கொடியினை ஏந்தி செல்ல வேண்டும். இதற்கு மேலும் NFTE செங்கொடியை கையிலேந்தி செல்லும் என்று சொன்னால், அது உழைப்பாளி வர்க்கத்தின் போராட்டங்களில் உயிர் நீத்த தியாகிகளை அவமதித்தது போலாகிவிடும்.

8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் பிரச்சாரம் துவங்கும் முன்பாகவே, NFTE சங்கத்தை விமர்சிக்க மாட்டோம் என கம்பீரமாக BSNL ஊழியர் சங்க தலைமை அறிவித்தது. அதனை நேர்மையாக செயல்படுத்தவும் செய்தது. ஆனால் NFTE தலைவர்கள் செய்தது என்ன? BSNL ஊழியர் சங்கத்தின் மீது சகதியை வாரி இறைத்தனர். BSNL நிறுவனம் நஷ்டம் அடைந்ததற்கு, BSNL ஊழியர் சங்கம் தான் காரணமாம். இன்று ஊழியர்களுக்கு உரிய தேதியில் சம்பளம் கிடைக்காமல் இருப்பதற்கும் BSNL ஊழியர் சங்கம் தான் காரணமாம். NFTE தலைவர்களின் இப்படிப்பட்ட பிரச்சாரம் தொழிற்சங்க இயக்கத்தின் முதுகில் குத்துவதற்கு சமமானதன்றோ? ஓட்டு பொறுக்குவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றால், இதை விட தெருவில் இறங்கி பிச்சையெடுக்கும் தொழிலை NFTE செய்யலாமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக