தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் தக்கு முக்கு திக்கு தாளம்


கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் எட்டு நாட்கள் தான் என்பார்கள்.  ஆனால் புரட்டல்வாதி மதிவாணனின் பொய் ஒரே நாளில் அம்பலமாகிவிடும்.

அவர் தனது NFTE சென்னை தொலைபேசி இணைய தளத்தில், 'மராட்டிய மாநிலத்தில் BSNLEU சங்கத்தின் மாநில செயலாளராக உள்ள நாகேஷ் நளவாடே தலைவராக உள்ள பூனா கூட்டுறவு சொசைட்டி குறித்து அவர்களின் மாத இதழான தொலை தொடர்பு தோழன் (செப்டம்பர்/2009 பக்கம்11) பத்திரிகையில் வெளியிட்ட செய்தியினை இத்துடன் இணைத்துள்ளேன்' என்று போட்டு விட்டு, அதில் ஊழல் முறைகேடு என பிதற்றியுள்ளார்.

இதனை, பூனா சொசைட்டியில் ஊழல் என்பதற்கான பயங்கரமான ஆதாரம் என்று அவரின் அடியாட்கள், WHATSAPP   செய்தியாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.

NFTEயின் மூமூமூமூத்த துணைத்தலைவருக்கு உண்மை பேச தெரியாது என்பது அனைவருக்கும் தெரியும்.  ஆனால் கணிதத்தில் கூட பலவீனமானவர் போலும்.  2019 செப்டம்பர் இதழில் வந்த செய்தியை, 2009 செப்டம்பர் இதழ் என மாற்றி போட்டுள்ளார்.  அதிலும் ஒரு உள் நோக்கம் வைத்துள்ளார்.

புரட்டுக்காரரின் பொய்யை அம்பலப்படுத்த 2019, செப்டம்பர், தொலைதொடர்பு தோழன் இதழின் 11ஆம் பக்கத்தை முழுமையாக போட்டுள்ளோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக