தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

இரட்டை வேடம் போடும் SEWA BSNL

இரட்டை வேடம் போடும் SEWA BSNL
புதிய பதவி உயர்வு திட்டத்தில் SC/ST ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டை BSNL  ஊழியர் சங்கம் நீக்கி விட்டது என SEWA BSNL பிரச்சாரம் செய்து வருகின்றது. இது எந்தவித அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டு. இந்திய நாட்டு உச்ச நீதி மன்றம் வழங்கிய  தீர்ப்பின் படி பதவிகள் அடிப்படையிலான ( POST BASED ) பதவி உயர்வில் மட்டும்தான் இட ஒதுக்கீட்டு முறை உண்டு. ஆனால்  சேவைக் கால (TIME BOUND ) அடிப்படையில் சம்பள  விகிதத்தை உயர் நிலைப்படுத்தும் பதவி உயர்வு திட்டத்திற்கு இட ஒதுக்கீட்டு முறை கிடையாது.
டெலிகாம் டெக்னிசியன், ஜுனியர் இஞ்சீனியர், ஜுனியர் டெலிகாம் ஆபிசர், ஜுனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசர் போன்ற பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு முறை இன்றைக்கும் அமுலில் உள்ளது. ஆனால் சேவைக்கால அடிப்படையில் சம்பள விகிதத்தை உயர் நிலைப் படுத்தும் பதவி உயர்வு திட்டமான  NEPP- யில் இட ஒதுக்கீடு கிடையாது. உச்ச நீதி மன்ற தீர்ப்பே இதற்குக் காரணமாகும்.
எனவே BSNLEU  சங்கம் NEPP  திட்டத்தில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்து விட்டது  என்று SEWA BSNL  சொல்வது  முற்றிலும் பொய்யாகும்
 SEWA BSNL  லிடம் நாம் பின்வரும் கேள்விகளைக் கேட்க விரும்புகின்றோம்
1) SC/ST  இட ஒதுக்கீட்டை BSNLEU ரத்து செய்திருந்தது என்றால்,  அதைப் பெறுவதற்கு  SEWA BSNL இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தது ? 
2) SEWA BSNL  அமைப்புக்கு அரசாங்கமும், BSNL நிர்வாகமும் அங்கீகாரம் வழங்கியது, SC/ST  இட ஒதுக்கீடு அமுலாவதை உறுதிப்படுத்துவதற்காகத்தான்.  என்றால், புதிய பதவி உயர்வுத் திட்டத்தில் SC/ST இட ஒதுக்கீட்டை  SEWA BSNL –ஆல் ஏன் அமுல்படுத்த முடியவில்லை ?

3) NFTE  – யால் முதலில் கொண்டு வரப்பட்ட  OTBP / BCR பதவி உயர்வுத் திட்டங்களிலும் கூட SC/ST இட ஒதுக்கீடு இல்லாமல்தான் இருந்தது.  இதனை SC/ ST  ஊழியர்களிடமிருந்து SEWA BSNL ஏன் மறைக்கிறது ? NFTE – க்கு வாக்களிக்குமாறு அதன் உறுப்பினர்களுக்கு SEWA BSNL  வழிகாட்டுவது எப்படி?
4)  NFTE - க்கு வாக்களிக்குமாறு தனது உறுப்பினர்களுக்கு SEWA BSNL  வழிகாட்டியுள்ளது.  2013 முதல், NFTE சங்கமும், BSNL நிர்வாகத்தால் அங்கீகரிக்கப் பட்ட சங்கமே.  புதிய பதவி உயர்வு திட்டத்தில் SC/ST இட ஒதுக்கீட்டை NFTE– யால் ஏன் கொண்டு வர முடியவில்லை ?
NFTE – க்கு வாக்களிக்குமாறு  தனது உறுப்பினர்களுக்கு  SEWA BSNL   வழிகாட்டுவது எப்படி ?
SEWA BSNL  இரட்டை வேடம் போடுகிறதல்லவா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக