இன்று DGM(ADMN), AGM(TENDER) ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 05-10-2016 ம் தேதி பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்டதை போல ஆட்குறைப்பு மற்றும் சம்பளக்குறைப்பு இல்லை என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஒப்பந்ததாரரிடம் இதுபற்றி பேசி சுமுக அமலாக்கத்திற்கு உதவவேண்டும் என்பதும் ஏற்கப்பட்டது. ESI, EPF, BONUS அமலாக்கத்தில் கண்காணிப்பு அவசியம் என வலியுறுத்தி உள்ளோம். இது தவிர உத்திரவிடப்பட்ட இடமாறுதல்களை உடன் அமலாக்க வேண்டியுள்ளோம். இதுபற்றி தனி உத்திரவு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. மாநில மட்டத்தில் ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தொடர்ந்து நாளை நடைபெறும் தர்ணா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநில சங்கத்திற்கு மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி .அமலாக்கத்தை தொடர்ந்து கண்காணிப்போம்.அவசியமெனில் மீண்டும் தலியிடுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக