தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 17 அக்டோபர், 2016

கோரிக்கைகள் ஏற்பு

தோழர்களே !
          மாவட்டத்தில் விருப்ப இடமாறுதல்கள் ,செக்சன் இடமாறுதல்கள்,கட்டிட இடமாறுதல்கள் சம்பந்தமாக ஒரு கொள்கை நிலையை எடுத்தோம்.தொடர்ந்து CSC  யில் பணி புரிவோருக்கு பொதுபிரிவில் பணியமர்த்த வேண்டும்.மருத்துவ காரணங்களுக்கான இடமாறுதல்களை பரிசீலிக்க வேண்டும் .கட்டிடங்களுக்குள் செக்சன் மாறுதல்களை அமலாக்க வேண்டும் என நிர்வாகத்திடம்  வலியுறுத்தினோம்.அதன்படி உத்திரவுகளும் வெளியிடப்பட்டன.போடப்பட்ட உத்திரவுகளில் சில மாற்றங்களையும் கோரினோம்.இடையில் சில தனி நபர்களும்,  NFTE  சங்க தலைமையும் சில தவறான நடைமுறைகளை அமலாக்க முயற்சி செய்தன.இதில் சில தல மட்ட அதிகாரிகளும் துனை சென்ற அனுபவத்தையும் கண்டோம்.இடமாறுதல் கொள்கை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் திட்டமிட்டபடி அமலாக்கப்பட வேண்டும் தவறினால் போராட்டங்கள் தவிர்க்க இயலாமல் போகும் என மாவட்ட நிர்வாகத்தை எச்சரித்தோம்.இந்த பின்னனியில் போடப்பட்ட உத்திரவுகள் 18-10-2016 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ அமலாக்கம் பெற வேண்டும்.தவறினால் அதன்மேல் உரிய விளக்கம் கோரப்படும் என அனைத்து தலமட்ட நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தல்  கடிதம்  நேற்று மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.உறுதியான நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்தை பாராட்டுகிறோம்.
அதை போல ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளிலும் நமது கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அமலாக்கம் பெற்றுள்ளன.இதிலும் நமது நன்றியை நிர்வாகத்திற்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக