தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 5 மார்ச், 2016

விரிவடைந்த மாவட்டச்செயற்குழு


04-03-2016 ல் நடைபெற்ற கோவை மாவட்ட விரிவடைந்த செயற்குழுவில்  தேதிக்கொடியை குறிச்சிகிளைசெயலர். தோழர்.T.A. பழனிச்சாமியும், சங்கக்கொடியை தோழ்ர், லியோபிரான்சிஸ் அவர்களும் ஏற்றிவைத்தனர். நமது மாவட்டத்தலைவர் தோழர்.கே.சந்திரசேகரன். தலைமை வகித்தார்.மாவட்ட அமைப்புச்செயலர் தோழர்.பி.நாச்சிமுத்து ,அஞ்சலி உரை செலுத்தினார்.மாவட்ட பொருளர். தோழர்.செள.மகேஸ்வரன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை செலுத்தினார்.மாவட்டச்செயலர்.தோழர்.சி.ராஜேந்திரன். விவாத அறிக்கையை அறிமுகப்படுத்து உரையாற்றினார்.பின்பு 7வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் நம் பங்கு என்ன என்பதை விவரமாக எடுத்துரைத்தனர் நமது அகில இந்திய உதவிப்பொதுச்செயலர்.தோழர்.எஸ்.செல்லப்பாவும், நமது மாநில செயலர்.தோழர்.அ.பாபுராதாகிருஷ்ணனும். செயற்குழுக்கூட்டத்தில் அனைத்துகிளைகளில் இருந்தும் தலைவர்,செயலர்,பொருளர்,மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் தோழர்கள்,கே.மாரிமுத்து,வி,வெங்கட்ராமன்,எஸ்.சுப்பிரமணியம்,அ.முகமதுஜாபர் ஆகியோரும், சங்க முன்னனி செயல்வீரர்களும் பங்கேற்று நமது வெற்றியை தொடர்ந்து நமது மாவட்டத்தில் பெற்வோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று நிருபித்தனர்..முன்னதாக  மாவட்டச்செயற்குழுவிற்கு மதிய உணவு ஏற்பாட்டினை தோழர்,லியோபிரான்சிஸ் அவர்கள் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்தது மிகவும் பாராட்டுக்குறிய அம்சமாகும்,தோழர்.T.A. பழனிச்சாமியும் அவர்கள் செயற்குழுவில் பங்கேற்ற அனைவருக்கும் தேநீர்,வடை, பிஸ்கட்  வழங்கி என அனைவரையும் உற்சாகபடுத்தினார்.தனது பணி ஓய்வை முன்னிட்டு அகில இந்திய ,மாநில, மாவட்ட சங்கங்களுக்கு தலா ரூ.1000 / மொத்தம் (ரூ.3000 /- ) ஐ வழங்கி தனது பங்களிப்பை தொடர்துவழங்கி வருவது பாராட்டுக்குரிய அம்சமாகும்.இறுதியாக மாவட்ட அமைப்புச்செயலர் தோழர்.எம்.சதீஸ் அவர்கள் நன்றி கூறி முடித்து வைத்தார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக