தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 22 டிசம்பர், 2015

ஆர்ப்பாட்டம்

கோவை 


78.2 சதவிகிதம் பஞ்சப்படியை வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் கருப்புப்பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சதவிகிதம் பஞ்சப்படி வழங்கக்கோரி நாடு முழுவதும் செவ்வாயன்று பிஎஸ்என்எல் கருப்புப்பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக, கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் தலைமையகம் முன்புஅனைத்து சங்க கூட்மைப்பின் சார்பாக கருப்புப்பட்டை அணிந்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சி.ராஜேந்திரன், வெங்கட்ராமன், மாரிமுத்து, குடியரசு, கே.சந்திரசேகரன், எஸ்.எஸ்.கோபாலகிருஷ்ணன், ராபர்ட்ஸ், பிரசன்னா, சிவராஜ், சிவராமன் மற்றும் ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர்

திருப்பூர்

திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 80க்கும் மேற்பட்ட  தோழர்,தோழியர்கள் கலந்து கொண்டனர்.


பொள்ளாச்சி

இதேபோல், பொள்ளாச்சி தொலைப்பேசி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எம்.நாகராஜன், நடராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் என்.சிவகாமி, மோகனசுந்தரம், பி.தங்கமணி உள்ளிட்ட பிஎஸ்என்எல் அனைத்து சங்க நிர்வாகிகள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உடுமலை 

உடுமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 39 தோழர்,தோழியர்கள் கலந்து கொண்டனர்.

பல்லடம்

பல்லடம் பகுதியில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 40 தோழர்,தோழியர்கள் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக