தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

நமது கூட்டுறவு சங்க செய்திகள்

03/01/2015 நடைபெற்ற நமது தொலை தொடர்பு கூட்டுறவு சங்கத்தின் RGB குழு கூட்டம்நடைபெற்றது அதில் கீழ்கண்டமுடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது...
v THRIFT FUND ரூபாய் 500/-லிருந்து ரூபாய் 800/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது .இதற்கு   வழங்கப்பட்டு    வந்த  வட்டிவிகிதம்   8%லிருந்து 9%மாக உயர்த்தப்பட்டுள்ளது.
v  குடும்ப நல நிதி (FWS) ரூபாய் 800/-லிருந்து ரூபாய் 1200/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உறுப்பினர்கள்  உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீட்டு தொகை ரூபாய் 4,00,000/-லிருந்து ரூபாய் 6,00,000/-மாக உயர்த்தப்பட்டுள்ளது.
v  நகை கடன் வசதி ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படும்.
v சாதாரண கடன் ரூபாய் 5,00,000/-லிருந்து ரூபாய் 6,00,000/-மாக உயர்த்தப்பட்டுள்ளது.
v  RECURRING DEPOSIT வசதி  10% வட்டி விகிதத்தில் நமது கூட்டுறவு சங்கத்திலேயே துவங்கப்பட்டுள்ளது.
v சாதாரண கடன் பெரும் வசதி மூன்று மதத்திளிருந்து குறைக்கப்பட்டு இனி மாதம் தோறும்பெற்றுக்கொள்ளலாம்.
               மேற்காணும் முடிவுகள் முறைபடி ஒப்புதல் பெற்று வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரும்.

1.      இந்த வருடம் நமக்கு வழங்க வேண்டிய டிவிடெண்ட் 12% இந்த மாதம் வழங்கப்படும்.
     2.கம்யூட்டர் கடன் ரூபாய் 30,000/-இந்தமாதம் முதல் வழங்கப்படும்.

======================================================================= 
 " கூட்டுறவு சங்கத்திலும் சிங்கங்கள் என நிமிர்ந்து நின்ற நமது தமிழ் மாநில BSNLEU சங்கத்தை சார்ந்த RGB உறுப்பினர்கள் " 

RGB உறுப்பினர்கள் கூட்டத்தில்  RGB உறுப்பினர்களுக்கு பரிசு தொகையாக ரூபாய் 10,000/-மும் ரூபாய் 2500/- மதிப்புள்ள ஒரு பயணப்பையும் வழங்கப்பட்டது. BSNL ஊழியர்களின் ஊதியத்தில் உயர்ந்திட்ட நமது தொலை தொடர்பு கூட்டுறவு சங்கம் கடந்த வருடம் சுமார் 1.5 கோடியளவுக்குவருவாய் இழப்பை சந்தித்திருப்பதால் மேலும் வருவாய் இழப்பு ஏற்பட்டு அந்த சுமை ஊழியர்கள் மேல் திணிக்கப்படும் என்பதால் அதற்கு இடம் தராமல் தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகளை வேண்டாம் என திருப்பி தந்து விட்டனர் . அதன் மூலம் சுமார் ரூபாய் 7,00,000/-வருவாய் இழப்பு தவிர்க்கப்பட்டது.  ஊழியர்களின் நலன் ஒன்றே குறியாக கம்பிரமாக நின்ற நமது தமிழ் மாநில BSNLEU  சங்கத்தை சார்ந்த RGB உறுப்பினர்களையும், நம் தோழர்களோடு இணைந்து பரிசுதொகையையும், பயணப்பையும் வேண்டாம் என்று நம்மோடு நின்ற SEWA BSNL ஐ சார்ந்த  தமிழகத்தின் முன்னனி தலைவர்களில் ஒருவரான தோழர்.சிவராமன் அவர்களையும் நமது கோவை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக