தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 17 டிசம்பர், 2014

பெண்ணுரிமை போராளி



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக, மாநிலக்குழு உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றிய தோழர் பாப்பாஉமாநாத் புரட்சிகர வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்.1945ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் தோழர்பாப்பா உறுப்பினரானார். 1946ம் ஆண்டு பொன்மலை சங்கத்திடலில் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூடும், அடக்குமுறைகளும் தோழர் பாப்பாவுக்கு உறுதியான படிப்பினைகளை அளித்தன.
1948ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. தோழர் பாப்பாவும் அவரது அன்னை லட்சுமியும் கட்சியின்தலைமறைவு செயலகத்தில் பணிபுரிய சென்னைக்கு அனுப்பப்பட்டனர். தோழர் பாப்பாவும் அன்னை லட்சுமியும் மற்ற தலைவர்களுடன் கைது செய்யப்பட்டு, கடும் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனர்.சிறைக்குள் நடந்த கொடிய தாக்குதலை கண்டித்து தோழர்கள் ஆர். உமாநாத், எம். கல்யாணசுந்தரம், ஆளவந்தார், அன்னை லட்சுமி, சிவகிரி பாண்டியன், பாப்பாஆகியோர் உண்ணாவிரதம் இருந்தனர். உறுதி குலையாது உண்ணாவிரதம் இருந்த 23 வது நாள் அன்னை லட்சுமி வீரமரணம் அடைந்தார். இறந்த நிலையில் கூட தோழர் பாப்பாவுக்கு பெற்ற அன்னையை பார்க்க அரக்கத்தனமான சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. சிறையிலிருந்து வெளிவந்த பின் தோழர் பாப்பா தொடர்ந்து கட்சிப் பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டார். நீண்ட சிறை வாழ்க்கைக்கும், போராட்ட வாழ்வுக்கும் சொந்தக்காரராக விளங்கியதோழர் உமாநாத்தை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தில் தந்தை பெரியார் பங்கேற்று வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்.ஜனநாயக மாதர் சங்கத்திற்கு அடித்தளமிட்டு அதன் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர் தோழர் பாப்பா உமாநாத். தமிழகத்தின் அனைத்து போராட்டங்களிலும், கட்சியின் கிளர்ச்சி பிரச்சாரப் பணிகளிலும் நீண்டகாலம் சேவை புரிந்து பெருமை சேர்த்தவர். திருவெறும்பூர்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய போது பெண்களின் பிரச்சனைகளை விடாப்பிடியாக வலியுறுத்தினார். தோழர் பாப்பா உமாநாத் அவர்களின் வீரம்செறிந்தவாழ்க்கை மாதர் இயக்கத்திலும், கட்சிப்பணிகளிலும்ஈடுபட்டுள்ள தோழர்களுக்கு உந்து சக்தியாக விளங்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக