பிப்ரவரி14
- காதலர் தினம்
- கி.பி. 498 - செயிண்ட் வேலன்டைன் தினம்.
- 1790 - வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.
- 1924 - ஐபிஎம் (IBM) நிறுவனம் அமைக்கப்பட்டது.
- 1946 - பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் எனியாக் - ENIAC என்ற கணினி பல மணி நேரம் பிடிக்க கூடிய கணக்குகளை சில விநாடிகளில் செய்து முடித்தது.
- 1961 - 103வது தனிமம் லோரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1987 - யாழ்ப்பாணம், கைதடியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பொன்னம்மான் உட்பட ஏழு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
- 1989 - இந்தியாவின் போபால் நகரில் 1984 ல் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய Union Carbide நச்சுக் கசிவு வழக்கில் இந்திய அரசுக்கு 470 மில்லியன் டாலர் இழப்பீடு தர ஒப்புக் கொண்டது Union Carbide நிறுவனம்.
- 1989 - சாத்தானின் கவிதைகள் நூலை எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு ஈரான் தலைவர் ருஹொல்லா கொமெய்னி மரண தண்டனை விதி்த்தார்.
- 1990 - பெங்களூருவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 92 பேர் கொல்லப்பட்டு 54 பேர் காயங்களுடன் தப்பினர்.
- 1998 - கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக