பிப்ரவரி 15
- கிமு 399 - சோக்கிரட்டீஸ் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
- 1637 - புனித ரோம் பேரரசின் மன்னனாக மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடினான்.
- 1898 - அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் USS Maine கியூபாவில் அவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வையடுத்து அமெரிக்கா ஸ்பெயின் மீது போரை அறிவித்தது.
- 1920 - யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.
- 1942 - சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 இந்திய, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஆஸ்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.
- 1946 - ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது.
- 1961 - பெல்ஜியத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து அமெரிக்க Figure Skating வீரர்கள் உட்பட 73 பேர் கொல்லப்ப்பட்டனர்.
- 1963 - சிங்கப்பூரில் முதன்முதலாக தொலைக்காட்சி அறிமுகம் ஆனது.
- 1965 - மேப்பிள் இலை சின்னத்தைக் கொண்ட கொடி கனடாவின் புதிய தேசியக் கொடியாக அறிவிக்கப்பட்டது.
- 1989 - ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக