சமீபத்தில், 50000 4G டவர்களை வாங்குவதற்கான டெண்டரை BSNL வெளியிட்டிருந்தது. ஆனால் அதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக, 23.04.2020 அன்றைய எகானாமிக் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. ’மத்திய அரசாங்கத்தின் "MAKE IN INDIA" திட்டத்தின் படி உருவாக்கப்பட்ட பொது கொள்முதல் கொள்கை-2017ஐ புறந்தள்ளிவிட்டு இந்த டெண்டர் உள்ளதாக வர்த்தக அமைச்சகத்திற்கு, உள்நாட்டு தொலை தொடர்பு நிறுவனங்கள் உருவாக்கியுள்ள அமைப்பான "TELECOM EQUIPMENT PROMOTIONAL COUNCIL(TEPC)" புகார் கொடுத்துள்ளது’ என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதன் அடிப்படையில், இந்த செய்தியின் மீதான அறிக்கையினையும், தவறு செய்துள்ள அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற எச்சரிக்கையையும் கோரி வர்த்தக அமைச்சகம் DoTக்கு கடிதம் எழுதியுள்ளது என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக