தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 1 ஏப்ரல், 2020

ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி தாரீர் தாரீர்


BSNL ஊழியர் சங்கம்
கோவை மாவட்டம்
அறிக்கை எண் 50                                                     01.04.2020
ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி தாரீர் தாரீர்
தோழர்களே "ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதிதிரட்ட BSNLEU மாவட்ட, மாநில சங்கங்களை BSNLEU மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
10 மாத காலத் திற்கு மேல் BSNLல் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் தரப்படவில்லை.  ஒப்பந்த ஊழியர்கள் முழு ஊதிய நிலுவை தொகையை பெறும் வண்ணம், நிதியினை ஒதுக்குமாறு கார்ப்பரேட் நிர்வாகத்தை BSNL ஊழியர் சங்கமும், BSNL CCWFம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துக் கொண்டுள்ளன.
ஆனால் இதுவரை அது பலனளிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, அரசாங்கம் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இது ஒப்பந்த தொழிலாளர்களின் துயரங்களை மேலும் பல மடங்கு அதிகரிக்க செய்துள்ளது. ஒப்பந்த ஊழியர்களுக்கு மனிதாபிமான உதவிகள் உடனடியாக செய்திட வேண்டிய அவசர தேவை ஏற்பட்டுள்ளது.
எனவே, BSNLEU மத்திய சங்க நிர்வாகிகள் மற்றும் மாநில செயலாளர்களின் ஆலோசனையோடு,  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்திட .’ஒப்பந்த தொழிலாளர் நிவாரண நிதிதிரட்டிட BSNLEU மத்திய சங்கம் முடிவெடுத்துள்ளது. BSNLEU கிளை, மாவட்ட, மாநில செயலாளர்கள் உடனடியாக களத்தில் இறங்கி, நமது ஊழியர்களிடமும், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட நமது நலம் விரும்பிகளிடமும், அதிகாரிகளிடமும் நன்கொடை பெற்றிட BSNLEU மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு உள்ளதால், ஒவ்வொருவரையும் நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நன்கொடைக்கான உத்தரவாதத்தை உடனடியாக பெற வேண்டும். இந்த பணியில் மத்திய சங்க நிர்வாகிகள், மாநில செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அனைவரும் ஒன்றிணைந்து ஈடுபட்டு நிதியினை திரட்டிட வேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்த நிதியினை திரட்டிட வேண்டும் என BSNLEU மத்திய , மாநில சங்கங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது.எனவே நமது  மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள் மற்றும் முன்னனி தோழர்கள் அனைத்து தோழர்களிடமும் உடனடியாக தொடர்பு கொண்டு  கீழ்க்கண்ட  மாநில சங்க வங்கி கணக்கில் நிதியினை செலுத்த வேண்டுகிறோம்.மேலும் நிதியினை செலுத்தும்பொழுது மாவட்ட சங்கத்திடம் விபரங்களை தெரிவிக்க வேண்டுகிறோம்.நன்றி  

தோழர்களே நிதி வழங்க வேண்டிய வங்கி கணக்கு
BSNL EMPLOYEES UNION,
TAMILNADU CIRCLE.,
CENTRAL BANK OF INDIA,
MAIN BRANCH, CHENNAI
IFSC CODE NO.CBINO280876
SB AC NO 1186439899

 தோழமையுடன்
சி.ராஜேந்திரன்
மாவட்ட செயலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக