தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 23 செப்டம்பர், 2019

BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாலரும், துணை பொதுச்செயலாளரும் BSNL CMD அவர்களை சந்தித்தனர்

BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy.GS ஆகியோர் BSNL CMD திரு P.K.புர்வார் அவர்களை 23.09.2019 அன்று சந்தித்து கீழ்கண்ட விஷயங்களை விவாதித்தனர்:

சமீபத்தில் நடந்து முடிந்த 8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் மீண்டும் முதன்மை சங்கமாக BSNLEU வெற்றி பெற்றதற்கு, துவக்கத்திலேயே BSNL CMD தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். நமது தலைவர்கள் அவருக்கு நன்றியை தெரிவித்தனர்.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 850 ST ஊழியர்கள் துன்புறுத்துதல்:-
இந்த பிரச்சனையை BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே எடுத்திருந்தது. 25/30 வருட கால சேவை முடித்த 850 ST ஊழியர்களை மஹாராஷ்ட்ரா மாநில நிர்வாகம் துன்புறுத்தி வருகிறது. அடிப்படையற்ற யாரோ ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த 850 ST ஊழியர்களும், பரிசீலனைக் குழுவின் முன் ஆஜராகி, மீண்டும் புதியதாக ST CERTIFICATE வாங்க வேண்டும் என கூறியுள்ளது. DoP&T விதிகளின் படி, இந்த CERTIFICATEகளின் உண்மைத் தன்மையை நிர்வாகம் தான், மாநில அரசு அதிகாரிகளிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது தொடர்பான ஒரு விரிவான கடிதத்தை BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே கொடுத்திருந்தது. 23.09.2019 அன்று BSNL CMDயிடம் இது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. நமது வாதங்களை CMD முழுமையாக ஏற்றுக் கொண்டார். மஹாராஷ்ட்ர மாநில நிர்வாகத்திற்கு DoP&T உத்தரவுகளை பின்பற்ற அறிவுறுத்துமாறு மனிதவள இயக்குனரை அழைத்து CMD, தேவையான வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளார். ST ஊழியர்களின் CERTIFICATEகளின் உண்மை தன்மையை மாநில நிர்வாகம் தான் ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டும் என்றும், புதிய CERTIFICATE களை வாங்க பரிசீலனைக்குழுவின் முன் ஆஜராக ST ஊழியர்களை நிர்பந்திக்கக் கூடாது என்றும் BSNL CMD தெளிவாக கூறியுள்ளார். இந்த பிரச்சனையில் சரியான நிலை எடுத்த CMD BSNLக்கு BSNL ஊழியர் சங்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டது.

BSNLன் நிதி நிலை தொடர்பாக விவாதிக்க அனைத்து சங்கங்களின் கூட்டத்தை கூட்டுக:-
நிறுவனத்தின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த தேவையான வழிவகைகளை விவாதிக்க அனைத்து சங்கங்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என BSNL ஊழியர் சங்க தலைவர்கள் BSNL CMD அவர்களை கேட்டுக் கொண்டனர். கடந்த காலங்களில் இது போன்ற கூட்டங்கள் நடைபெற்றதையும், நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடையே ஒரு வலுவான கூட்டுறவை உறுதிப்படுத்தும் வகையில் இந்த முறை தொடர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனை மனமுவந்து ஏற்றுக் கொண்ட BSNL CMD, விரைவில் அந்தக் கூட்டத்தை கூட்ட ஒத்துக் கொண்டார்.

செப்டம்பர் மாத ஊதியம் உரிய தேதியில் வழங்குக:-
அக்டோபர் மாதத்தில் முக்கிய திருவிழாக்களான ஆயுத பூஜை, தசரா மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவிருப்பதால், செப்டம்பர் மாத சம்பளத்தை உரிய தேதியில் வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்க தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். அதற்கு, மின்சார கட்டண பாக்கியாக உள்ள 500 கோடி ரூபாய்களை உடனடியாக கட்ட வேண்டிய கட்டாயத்தில் நிறுவனம் இருப்பதாக BSNL CMD தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக