![]() |
தோழர்.M.முருகையா |
தோழர்களே, மறைந்த நம் தலைவர் தோழர். M.முருகையா அவர்கள் (வயது 56 ) தனது பணி நாட்களின் பெரும்பகுதியை ஒப்பந்த ஊழியர் நலனுக்காக அற்பனித்துக்கொண்டவர்.கடந்த வாரம் கூட ஒப்பந்த ஊழியர் நிரந்தம் மற்றும் இதர பிரச்சனைகளுக்காக நீதிமன்ற பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்துக்கொண்டார்.ஒப்பந்த ஊழியர் சங்க அமைப்பு மற்றும் அவர்கள் அடைந்துள்ள அத்துனை முன்னேற்றங்களிலும் தோழர்.முருகையா அவர்களின் பங்கு மகத்தானது.இடதுசாரி கொள்கையை ஏற்றுக்கொண்டு குடும்ப நலன்களை விட்டுக்கொடுத்து தன் உடல்நலனை பாராமல் பணியாற்றியவர் நம் தோழர் முருகையா .எளிமையும், பரிவான அணுகுமுறையும், வெளிப்படைத்தன்மையும் போராட்ட குணமும் ஒருங்கே பெற்ற நம் தோழர் .முருகையா அவர்களின் மறைவு மிகப்பெரும் இழப்பாகும்.அன்னாரின் மறைவிற்கு கோவை மாவட்ட சங்கங்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.நமது சங்கங்களின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருவார காலத்திற்கு ஒத்திவைக்க மாநில சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.அதை கிளைகள் அனுஷ்டிக்க தோழமையுடன் வேண்டுகிறோம். தோழர் முருகையா விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதே நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்.
தோழமையுள்ள
BSNLEU
மற்றும் TNTCWU
மாவட்ட சங்கங்கள்
I enjoyed reading this blog post. It was inspiring and informative. Thank you. nata coaching classes in chennai
பதிலளிநீக்கு