தோழர்களே ,கோவை PGM திரு.V.சுந்தர் அவர்கள் , இன்று 14-12 -2017 முதல் தெலுங்கான CGM ஆக பதவி உயர்வு பெற்று செல்கிறார்.கடந்த எட்டு மாதங்களில் நம் சங்கத்தோடு நல்ல உறவை மேம்படுத்தி வந்தார்.ஊழியர்களின் பிரச்சனைகளில் நியாமான மற்றும் மனிதாபிமான அணுகுமுறையை அவரிடம் காண முடிந்தது.சேவையை மேம்படுத்த அவர் எடுத்துக்கொண்ட அக்கறை பாராட்டுகுரியது.இன்னும் சில காலம் கோவையில் தொடர்ந்து இருந்தால் இன்னும் நிறைய முன்னேற்றங்களை பெற்றிருக்க முடியும்.இரண்டு நாள் வேலை நிறுத்ததின் இடையே 13-12-2107 மாலை அவரை சந்தித்து பாராட்டி விடை கொடுத்தோம்.அந்த நிலையிலும் தீர்க்கப்படாமல் இருந்த ஒப்பந்த ஊழியர் பிரச்சனை உள்ளிட்ட சிலவற்றிக்கு தீர்வை தந்தது பாராட்டுக்குரியது.அவரது பணி சிறக்க கோவை மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக