தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 26 ஜூலை, 2017

பிஎஸ்என்எல் அலுவலர்கள், ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்

பிஎஸ்என்எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஜூலை 27 அன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்திட முடிவு செய்திருப்பதாக, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் கன்வீனர் பி.அபிமன்யு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஊதியத் திருத்தம் கோரி, வரும் ஜூலை 27 அன்று பிஎஸ்என்எல் ஊழியர்களும், அலுவலர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
பொதுத்துறை ஊழியர்களுக்கான ஊதியத் திருத்தம் குறித்தபேச்சுவார்த்தைகள் 2017 ஜனவரி 1 அன்றே தொடங்கியிருக்க வேண்டும். இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சதீஷ் சந்திரா தலைமையில் மூன்றாவது ஊதிய திருத்தக்குழு அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. அக்குழுவும்தன் அறிக்கையை அரசாங்கத்திற்கு அனுப்பி, அமைச்சரவைக்குழுவும் அதனை 2017ஜூலை 19 அன்று ஏற்றுக்கொண்டுவிட்டது. அக்குழு அளித்துள்ள பரிந்துரையில் மிகவும் முக்கியமான ஒன்று, தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக லாபம் ஈட்டித்தரும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மட்டும் ஊதியத் திருத்தம் செய்திட வேண்டும் என்பதாகும்.இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் பிஎஸ்என்எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஊதியத் திருத்தத்திற்கு தகுதி அற்றவர்களாகிறார்கள்.
பிஎஸ்என்எல் நிறுவனம் இன்றைய தினம் நட்டத்தில் இயங்குவதற்கு அதன் ஊழியர்கள் காரணமல்ல, மாறாகஅரசாங்கமே காரணம் என்பதையும் அது அமல்படுத்திவரும் பிஎஸ்என்எல் விரோத கொள்கைகளே காரணம் என்பதையும் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். பிஎஸ்என்எல் நிறுவனம், 2006 ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டுவரை தன்னுடையமொபைல் வலை விரிவாக்கத்திற்கு தேவையான உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்குஅரசாங்கத்தால் அனுமதிக்கப்படவில்லை. இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட டெண்டர்களை அரசாங்கம் ஒன்றன்பின் ஒன்றாக தள்ளுபடி செய்து வந்துள்ளது. தனியார் டெலிகாம் நிறுவனங்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறு செய்து வந்தது.
அரசாங்கமே தொடர்ந்து முட்டுக்கட்டை விதித்து வந்ததன் காரணமாகவே, மொபைல் வளர்ச்சியில் பிஎஸ்என்எல் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லை. எனவே, பிஎஸ்என்எல் அலுவலர்களும், ஊழியர்களும் தங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 27 அன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கும் அரசாங்கம் செவிசாய்க்கவில்லைஎன்றால், பிஎஸ்என்எல் அலுவலர்கள் ஊழியர்கள் போராட்டங்கள் தீவிரமாகும். இவ்வாறு பி.அபிமன்யு கூறியுள்ளார். (ந.நி.)
 ==============
நன்றி தீக்கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக