மேலே உள்ள படம் தொழிற்சங்க நோட்டீஸ் பலகை
என்று யாரும் நினைக்க வேண்டாம்.வாடிக்கையாளர்களுக்கு நமது சேவைகள் பற்றி விரிவாக
எழுதபயன்படும் வாடிக்கையாளர் சேவை மையத்தில் உள்ள தகவல் பலகை தான்.
அப்படியா ! ஊழியர்களை CSC நோட்டீஸ் பலகையில்
பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் சிறப்பான வேலை செய்யும் அத்தகைய அதிகாரி உள்ள
இடம் எந்த இடம் என கேட்கும் நமது தோழர்களின் கேள்வி புரிகிறது
அந்த இடம் பற்றி சில குறிப்புகள் இதோ !
* தொழிற்சங்கங்கள்
சார்பில் மேளாவை நடத்திய போது அந்த பகுதிக்கு வராமல் அலுவலகத்தில் இருந்து
மேளாக்கான நெட்வொர்க் இணைப்பை துண்டித்து , மேளாவை சீர்குலைக்க நினைத்த போது , பின்பு DGM,AGM
யுடன்
பேசி நெட்வொர்க் இணைப்பை பெற்று 600
சிம்கார்டுகள்
விற்ற இடம்
*ஊழியர்களுக்கு
பெண்சன் பேப்பர்களை மாவட்ட நிர்வாகம் அனுப்பிய பொழுது அதை ஊழியர்களுக்கு தராமல் அலாமாரியில் பூட்டி
வைத்து எவ்வித தகவல்களும் அளிக்காத பகுதி
*NEPP சம்பந்தமாக
கடிதங்களை மாவட்ட நிர்வாகத்திற்கும்,ஊழியர்களுக்கும் தராமல், சங்க நிர்வாகிகள் கேட்டும் தனக்கு எவ்வித கடிதமும் வரவில்லை என்று
உண்மையை மட்டுமே கூறும் பகுதி
*ஊழியர்களின்
விருப்ப மாற்றல் கோரும் கடிதங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பாமல் வேண்டுமென்றே
கிடப்பில் போட்டுவைக்கும் பகுதி
*கோட்டா
அதிகாரியுடன் சங்கங்களின் தரப்பில் நேர்கானல் நடக்கும் பொழது DE அவர்களின் எச்சரிக்கையும் பொருட்படுத்தாமல்
வீடியோ எடுத்து மிரட்டும் பகுதி
தனது பணியை சரிவரசெய்யாமல் ஊழியர்களை
பழிவாங்க்குவது மட்டும் தான் தனது சிறப்பான கடமை என்று நினைக்கும் ராமநாதபுரம் துணைகோட்டாப்பொறியாளர் அவர்கள் பணியாற்றும்
பகுதி தான் மேலே குறிப்பிட்ட தகவல் பலகை வைக்கப்பட்டிருக்கும் இடம்.
சரி அப்பகுதியில் ஊழியர்களை பழிவாங்கதுடிப்பதன்
நோக்கம் என்ன
காரணங்கள்
1)
அனைவரும் நம் சங்க
உறுப்பினர்கள்
2)
ஊழியர்களின்
கோரிக்கைகளை மேல் மட்ட அளவில் கொண்டு சென்று பிரச்சனைகள் தீரும் வரை போராடும்
தோழர்கள் உள்ள பகுதி
3)
டெலிகாம் மெக்கானிக்
தோழர்கள் அதிகமாக இருந்தாலும் மேளாக்களை சிறப்பாக செய்து காட்டும் கிளை
ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறோம்
பணிகலச்சாரத்தை
BSNLEU தோழர்களுக்கு மற்றவர்கள் சொல்லித்தரத்தேவையில்லை.
ஏனெனில் எங்கள் தோழர்களுக்கு எங்கள் மத்திய மாநில சங்களின் போராட்ட
அறைகூவலோடு ,சேவைகள் பற்றிய அறைகூவல்களையும் தான் எங்கள் தலைவர்கள்
போதிக்கின்றனர்.அதனால் தான் வாடிக்கையாளர் மகிழ்விப்பு வருடம்,SWAS, மேளாக்கள் , கூடுதலாக ஒரு மணி நேர வேலை போன்ற வேலை கலச்சாரத்தை எங்க
ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பல அனுபவங்களும் அதற்கு
சான்று.கோவையில் முந்தைய உதாரணங்கள் அனைவருக்கும் தெரியும்.சமீபத்தில் மார்ச்
மாதம் நடைபெற்ற மேளாக்களில் ஊழியர்கள் ,சங்கங்கள் விற்ற சிமார்டுகள் மூலம்
தமிழகத்தில் 30000க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் விற்று சாதனை படைத்திருக்கிறோம்.வேண்டுமென்றால்
ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்த சிம்கார்டுகளோடு ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளவும்.
ராமநாதபுரம்
பகுதியில் ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை உபகாரணங்களை வாங்கித்தர முயற்சியில்லை,பிராட்பேண்ட்
சேவை வழங்குவதில் உள்ள தொழில்நுட்ப கோளாறு சரி செய்யாதது,கேபிள் பழுது ,பிரைமரி
பழுதுகளை நீக்க பல முறை கடிதம் கொடுத்தும் பலனில்லை, சிக்னல்கள் பழுது பற்றி
மேல்மட்டத்திற்கு தெரிவிக்காமல் காலம் தாழ்த்துவது, மேன்பவரில் கூடுதலாக ஆட்களை
மற்ற பகுதியில் கேட்கும் பொழுது. மேன் பவர் ஆட்களை DE சொல்லியும் கூட கேட்காமல் வேலையை விரட்டி விடுவது இது போன்ற செயல்களை சரி செய்து சேவை வழங்குவதில்
கவணம் செலுத்தினால் நல்லது.
ஏனெனில் BSNLEU
தோழர்கள் அடக்குமுறைக்கும் ,மிரட்டல்களுக்கும் அஞ்சி ஒதுங்கும்
தோழர்கள் அல்ல .அதை துனிச்சலாக எதிர் கொண்டு முறியடிக்கும் வல்லமை படைத்தவர்கள் என்பது
வரலாற்றை புரட்டிபாருங்கள் . இதை மேல் மட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும்
இல்லையேல் போராட்டங்கள் தவிர்க்க இயலாது என்பதை மாவட்ட நிர்வாகத்தை
கேட்டுக்கொள்கின்றோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக