மார்ச் மாத மேளாவில் நமது செயல்பாடு அனைவரும் அறிவோம். மொத்த விற்பனையான 30343 ல் நம் தோழர்கள் மட்டும் 14129 சிம்கார்டுகள் 12 நாட்களில் விற்பனை செய்து மார்ச் மாதம் சிம்விற்பனையில் கோவை மாவட்டத்தை தமிழ்நாட்டில் முதல் இடத்திற்கு கொண்டு வந்தோம்.31-03-2017 ல் நடந்த PGM அவர்களின் அனைத்துசங்க கலந்துரையாடலில் PGM அவர்கள் நமது தோழர்களை வெகுவாக பாராட்டினார்.அப்போது சங்கங்களக்கு பாராட்டு கடிதம் வழங்க உள்ளதாக தெரிவித்து 01-04-2017 அன்று நமது மாவட்ட செயலரிடம் பாராட்டு கடிதம் வழங்கப்ட்டது.31-03-2017 ல் PGM அவர்களிடம் நமது சங்கம் சார்பில் மாவட்டசெயலர் அவர்கள் சங்கங்களுக்கு மட்டும் பாராட்டு கடிதம் வழங்குவதோடு இல்லாமல் மேளாவில் சிறப்பாக செயல்பட்ட அனைத்து தோழர்,தோழியர்களுக்கும் தனிப்பட்ட முறையில் பாராட்டுக்கடிதம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.அதன்படி நேற்று மேளாவில் சிறப்பாக செயல்பட்ட அனைத்து தோழர்,தோழியர்களுக்கும் பாராட்டு கடிதம் நிர்வாகத்தால் மாவட்டச்செயலரிடம் பாராட்டுகடிதம் வழங்கபட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.நமது கோரிக்கை ஏற்று அனைத்து தோழியர்,தோழர்களுக்கும் பாராட்டு கடிதம் வழங்கிய நிர்வாகத்திற்கு நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக