06-03-2017 அன்று அனைத்து சங்க பிரதிநிதிகளுடன் PGM ஒருமணி நேர பணி பணிகளை பற்றி
விவாதம் நடத்தினார். அதன் பின் 09-03-2017 அன்று நடைபெற்ற மாவட்ட செயற்குழுவில் 1 மணி
நேர கூடுதல் பணி என்பது பிரதானமான விவாதப்பொருளாக இருந்தது கோவை
மாவட்டத்தில் மத்திய சங்கங்களின் முடிவுகளின்படி கூடுதலாக ஒரு மணி நேர பணி செய்வது
சம்பந்தமாக நமது தோழர்கள் சிறப்பாக விவாதித்தனர்08- மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இனங்க நமக்கு தரப்பட்ட
இலக்கு 10000 சிம்கார்டுகள், விற்க 37 மையங்களில் நடத்த 105 பெயர் பட்டியல் கொண்ட
சிறப்பு மேளாக்களுக்கான குழு அமைக்கப்பட்டது..அதன் பிறகு 15-03-2017 முதல் 37 இடங்களில் சிறப்பு மெகா மேளாக்களை நடத்த
நிர்வாகத்திடம் 105 தோழர்களின் பெயர்பட்டியல் வழங்கப்பட்டது. மேளாக்களில் நமது சங்கம்
சார்பாக சுமார் மேட்டுப்பாளையம் 10000 நோட்டீஸ்களும், கணபதி 2000, சரவணபட்டி 2000 ,தனி
நபர் ஸ்பான்சர் 5000 நோட்டீஸ்களும் அச்சடித்து வழங்கப்பட்டது. முன்னதாக ஒரு மணி நேரம்
பணியில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் கணபதியில் கூடுதலாக ஒரு மணி
நேரம் பணம் வசுலிப்பது என துவங்கியது.கிணத்துக்கடவில் புரவிபாளையத்தில் மார்ச் முதல் வாரத்தில் கிளைச்செயலர் பஷீர் முயற்சியில் தனி
ஒரு நபராக ஞாயிற்றுகிழமையில் 167 சிம்கார்டுகள் விற்பனை செய்யப்பட்டது. இலக்கு
தரப்படுவதற்கு முன்பாகவே ராம்நகர் கிளையின் சார்பாக 1600
சிம்கார்டுகளும்,கிணத்துக்கடவில் 167 சிம்கார்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேளாக்களில் பெண்கள் உள்ளிட்ட பெயர் பட்டியலில்
இல்லாத 80 க்கும் மேற்பட்ட தோழர்களும் பங்கெடுத்தது உற்சாகத்தை ஊட்டியது. பிபி புதூர் கிளைசெயலர் தோழர் தங்கராஜ் மேளாக்களை தனியாக நடத்தி 500க்கும் மேற்பட்ட சிம்களை விற்பனை செய்துள்ளது
பாராட்டுக்குரியது ஆகும். 12 நாட்கள் நடைபெற்ற மேளாக்களில் 40 இடங்களில்
1,2,3 நாட்களாக 91 நாட்களாக நடைபெற்றது,.இதில மொத்தம் 14129 சிம்கார்டுகளும், தரைவழி இணைப்புகள் 415ம் ,MNP
260ம் FANCY சிம்கார்டுகள் 6 ம்
,FTTH 16 ம் விற்பனை செய்யபட்டது. மார்ச் மாததில் விற்ற 30343 சிம்கார்டுகளில் நமது சங்கமுயற்சியால்
14129 பிப்ரவரியில்
இரண்டு இடங்களி 1766 சிம்கார்டுகள் விற்கப்பட்டது சரவணம்பட்டி கிளையின்
சார்பாக 64 தரைவழி இணைப்புகள் உடனடியாக தரப்பட்டது. மேளாக்களில் மாவட்டசங்க நிர்வாகிகள்,மாநில
சங்க நிர்வாகிகள்,கிளை செயலர்கள்,நிர்வாகிகள்,பெண் தோழியர்கள் சிவகாமி,இந்திரா அரவிந்தன்,
ஜெயந்தி, விஜயகுமாரி,லோகாம்மாள், பத்மாவதி பாலகிருஷ்ணன், புஷ்பா,ஆனந்தி,சூர்யகலா செளந்திரராஜன்
உள்ளிட்டோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.31-03-2017 நிர்வாகம் மற்றும் அனைத்து
சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் நமது பணிகள்
சம்பந்தமான விரிவான விளக்கத்தை மாவட்டசெயலர் முனவைத்தார். நமது முன் முயற்சி அனைவராலும்
பாராட்டப்பட்டது.
மேளாக்கள் விபரங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக