தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

நிர்வாகம் மற்றும் அனைத்து சங்க கூட்டம்

24-08-2016 அன்று புதிய தரைவழி திட்டம் 49 பற்றி விவாதிக்க நிர்வாகம் அனைத்து சங்கங்களையும் அழைத்திருந்தது.
நம் மாவட்டசங்கம் சார்பாக மாவட்டத்தலைவர் தோழர்.கே.சந்திரசேகரன் மற்றும் மாவட்ட பொருளாளர் தோழர்.செள.மகேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.
திருப்பூரில் செப்டம்பர் 2 வேலைநிறுத்தம்  தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள மாவட்ட செயலர் சென்றதால்  விவாதத்தில் பங்கேற்கவில்லை.
விவாதத்தில் தெரிவிக்க வேண்டிய கருத்துக்கள் சம்பந்தமாக 23-08-2016 அன்று மாலையில் நடைபெற்ற  மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் கிளைசெயலர்கள் கூட்டத்தில் விவாதித்ததின் அடிப்படையில் கீழக்கண்ட கருத்துக்கள் நிர்வாகத்திடம் 24-08-2016  மதியம் 02-30 மணி அளவில் நடைபெற்ற அனைத்து சங்க கூட்டத்தில் நம் சங்க சார்பாக முன் வைக்கப்பட்டது
1) முதல் நாள் அறிவித்து மறுநாள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்பது சரியல்ல . இந்த அணுகுமுறை மாற்றப்பட வேண்டும்.
2) புதிய தரைவழி திட்டம் 49 பற்றி விவாதிப்பதற்கு முன் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட அவுட்சோர்சிங் டெண்டரை பற்றி விவாதிக்க வேண்டும்.
3) சிறந்த சேவைக்கு அடிப்படை  HMT , TOOLS, TOOL BAG  , ஆகியவையே ஆகும். டெலிகாம் டெக்னிசியன் தோழர்கள் சேவையை தருவதற்கு மேற்கண்ட உபகாரணங்கள் உடனடியாக வழங்க வேண்டும்.
4)  புதிய இணைப்புகள் தருவதற்கு கேபிள்கள்,டிராப் ஒயர், ஜம்பர் ஒயர், மற்றும் கேபிள்  பழுது பார்க்கும் கருவிகள் உடனே ஏற்பாடு செய்வது அவசியமாகும்.
5) சாலை விரிவாக்கம், சாக்கடை, குடீநீர் குழாய் பதிப்பு, மின்சார கேபிள்கள் பதிப்பு போன்றவைகளால் நம்முடைய கேபிள்கள்  அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிகம் பாதிக்கிறார்கள். எனவே நிர்வாகத்தின் மேல்மட்ட அதிகாரிகள் மாநகராட்சி நிர்வாகம், பிற அரசு துறைகளின் உயர் அதிகாரிகளிடம் நேரில் சென்று நம்முடைய கேபிள்கள் பாதிப்பு ஏற்படாதவாறு  வலியுறுத்த வேண்டும்
6) NEW TELEPHONE INSTRUMENT  பற்றாக்குறையை போக்க வேண்டும்.
7) கேபிள்கள் பழுது நீக்க கூடுதல் மேன்பவர் அவசியமாகிறது.
8) அனைத்து சங்கங்களின் கூட்டங்களை அடிக்கடி கூட்டப்பட வேண்டும்
9) 12-08-2016 அன்று  PGM அவர்களுடன் விவாதிக்கும் பொழுது வெளிப்படையான டெண்டர் பற்றிய விவாதம் தேவை என வலியுறுத்தினோம். மாறாக டெண்டர் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே டெண்டர் ரத்துசெய்யப்பட வேண்டும்.
10)   டெண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ள(மாவட்டம் முழுவதும்) இடங்களில் பெரும்பாலும் புதிய இணைப்புகள் தர ஏதுவானதாக வாய்ப்புள்ள இடங்களே ஆகும். கேபிள் பழுதுகளை நீக்கினால் பயன்படுத்த கூடியதாக இணைப்புகள் தர தயரானதாக உள்ளது. எனவே தற்பொழுது கோரப்பட்டுள்ள அவுட்சோர்சிங் டெண்டர் அவசியமற்றது.
11)   தவறான காரணங்களை சொல்லி ஊழியர்களிடம் இருந்து பெறப்பட்ட பட்டியலை  NON Feasible  என அறிவித்தது சரியல்ல.
12)   ஊழியர் தரப்பு கூட்டங்கள் நடத்துபடுவதில் சுனக்கம் உள்ளது .DE  / DGM ஆகியோர் ஊழியர் தரப்பு கூட்டங்களில் பங்கேற்று தங்களது கருத்துகளை மட்டும் கூறாமல்  TM/TTA  தோழர்களின் கருத்துகளையும் கேட்டு  சேவையை மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.ஏனெனில்   TM/TTA  தோழர்கள் தான் நேரிடையாக மக்களை சந்திக்கின்றனர்.அவ்வாறு செய்தால் சேவை மேம்படுத்தப்படும்.
13)   டெலிகாம் டெக்னிசியன் தோழர்களுக்கு தேவையான உபகாரணங்கள், கேபிள் பழுதுகளை கண்டுபிடிக்க கேபிள் பழுது நீக்கும் கருவிகள் மற்றும் கேபிள்கள் ,கேபிள் பிரைமரி பழுது நீக்குதல், பழுதடைந்த பில்லர்கள்,மாடூல்களை மாற்றித்தருதல்,மேன்பவர் வசதிகளை செய்து கொடுத்தால் , நிர்வாகம் எதிர்பார்க்கும் புதிய இணைப்புகளை காட்டிலும் அதிகமாகவே எங்களது தோழர்களால் தர முடியும்.
14)   BSNL ஊழியர் சங்கம் களம் இறங்கினால் மட்டுமே ஏதும் வெற்றிகரமாகும் என்பதை வாடிக்கையாளர் மகிழ்விப்பு வருடம்,  SWAS   மேளாக்கள் நடத்தியதன் மூலம் நிருபித்துள்ளோம்.இந்த இயக்களில் நிர்வாகத்தின் பங்களிப்பு போதுமானதாகவும், திருப்திகரனமாகவும் இல்லை என்பதே எங்கள் விமர்சனம்.
15)   மொபைல் சேவையில் சிக்னல்கள் சரியாக கிடைப்பதில்லை இதை சரி செய்ய வேண்டும்.
16)   அமைதியான சூழலில் பணியாற்றும்போதுதான் சிறந்த சேவையை அளிக்கமுடியும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.எனவே சுமூகமான சூழலை உருவாக நிர்வாகம் முன் வர வேண்டும்.தவறினால் ஏற்படும் நடப்புகளுக்கு நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும்.
இதே கருத்தை இன்று 25/08/2016  AGM(ADMN) அவர்களிடமும் மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்திற்கு பின் இதுபற்றி விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி இறுதி செய்ய உள்ளோம்.விபரங்கள் மாநில செயலரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.வழிகாட்டல் பெற்றதும் அடுத்த கட்ட திட்டம் பற்றி தீர்மானிப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக