தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 22 பிப்ரவரி, 2016

உண்மையாக சொல் நீர் செயல்படும் தலைவரா ? இல்லை கோயபல்ஸ் கூட்டத்தின் பிரச்சார தூதுவரா ? ஆதரவு யாருக்கு இல்லை. உண்மை இன்னமும் வேண்டுமா. ?.

கோவை NFTE-BSNL மாவட்டச்செயலர்  அவர்களுக்கு தன்னால் எதையும் சாதிக்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் நமது மாவட்டச்செயலர்  மீது அவதூறு தெரிவித்திருக்கிறார். BSNLEU மாவட்டசெயலரின் நாணயத்தின் மீது சான்றிதல் வழங்க கோவை NFTE-BSNL மாவட்டச்செயலருக்கு எவ்வித தகுதியாவது இருந்தால் அதை தனது செயல்பாட்டின் மீது காட்டலாம். செயல்பாடே இல்லாமல் வெறும் அவதூறு மட்டும் பரப்பி தொழிற்சங்கத்தை நடத்த முடியாது என்பதை கோவை NFTE-BSNL மாவட்டச்செயலர்  அவர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.தனது மாவட்டசெயலர் காலத்தில் அவர் எதையாவது சாதித்து இருந்தால் அதை தெரிவித்து விமர்சனம் செய்வது இடதுசாரி தொழிற்சங்க தலைவருக்கு அழகு. அதைவிட்டு விட்டு தனது தொழிற்சங்கத்தில் தூங்கிவிட்டு தனது செயல்பாட்டின் மீது  விமர்சனம் செய்வபவர்கள் பற்றி அவதூறு பரப்புவது தான் நாணயமற்ற செயலா ?. அதனால் தான் அவரது  செயல்பிடிக்காமல்(தொல்லை தாங்கமல்) சங்க அலுவலகத்தில் அவர் தூங்கி கொண்டிருக்கும் போது அவரின் கைபேசியை எடுத்துச்சென்றுவிட்டார்கள். ஆனால் அவர் சங்கம் சார்ந்த தோழர்களை திருடி விட்டார்கள் என்று புலம்பி தீர்த்தார். இது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். இந்நிலையில் தனது செயல்பாடின்மையை மறைப்பதற்கு கோவை BSLEU மாவட்ட செயலரை விமர்சனம் செய்து மகிழ்ச்சி பெற முயற்சிப்பது அவரது குறுகிய புத்தியையே காட்டுகின்றது .
BSNLEU  முடிவுகள் எந்த ஒரு தனி நபரின் முடிவுகள் அல்ல. 14 பேர் கொண்ட TRANSFER  கமிட்டியின் முடிவுகளே ஆகும். மேற்படி  SR.ACC பிரச்சனை விவாதத்திற்கு வரும் போதே, கமிட்டியில் விவாதித்து முடிவு சொல்வதாகத்தான் தெரிவித்தோம். (அதையே  NFTE BSNL  மாவட்டத்தலைவர்  அவர்களே DGM(ADMN) அவர்களுடன் நடைபெற்ற பேட்டியின் போது தெரிவித்தார் ) SURPLUS க்கும்,  ROTATIONக்கும்  வேறுபாடு உண்டு. 9 பேர்(SURPLUS) இடமாறுதலில்  BSNLEU தோழர்களும் அடங்குவர்.பாதிப்பு எனினும் கொள்கை முடிவாகவே அதை மாவட்ட சங்கம் விவாதித்து, ஏற்றது.
   ”ONE MAN SHOW ” – என்பது கோவை  NFTE-BSNL மாவட்டசெயலரின் தனிப்பெரும் கொள்கை .  ” கூட்டுச்செயல்பாடு என்பதே   BSNLEU வின் அடிப்படை கொள்கை. கிளை,மாவட்டம், மாநில மற்றும் அகில இந்திய மட்டத்தில் இந்த அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறோம்.
கோவை மாவட்ட  NFTE-BSNL மாவட்டசெயலர் பற்றி , அவரின் உறுப்பினர்களின் பிரதிநிதிகள் (கிளைச்செயலர்கள்) என்ன நினைக்கிறார்கள் என்பதை தகவலுக்காக தர விரும்புகிறோம். தன் உறுப்பினர்களை பாதுகாப்பது  BSNLEU வின் தாரக மந்திரம் .தன் உறுப்பினர்களையே பழிவாங்கத்துடிப்பது  NFTE-BSNL – கோவை மாவட்டசெயலர் வாழ்க்கை லட்சியம் “.

          உலக தொழிற்சங்க வரலாற்றில் தொலைத்தொடர்பு சங்கங்களுக்கு என்று தனி வரலாறு உண்டு. ஆனால் முதன்முறையாக தன் சங்க மாவட்டச்செயலர் (NFTE-BSNL ) மீது கிளைச்செயலர்கள் நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டு வந்துள்ளது கோவையில் தான். கிளைச்செயலர்கள் இல்லாமல் மாவட்டச்செயற்குழு நடத்த முயன்று தன் பதவியை காப்பற்ற போராடிக்கொண்டிருக்கும் NFTE-BSNL கோவை மாவட்ட செயலருக்கு  ஊழியர்களின் நலனில் அக்கறையுடன் பணியாற்றிக்கொண்டு இருக்கும், அனைத்து உறுப்பினர்களின் பெருத்த ஆதரவுடன் (கோவை மாவட்ட NFTE –BSNL முன்னனி தலைவர்கள் உட்பட) செயல்பட்டு வரும்  BSNLEU வின் கோவை மாவட்ட செயலரை பற்றி விமர்சிப்பது. சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பாகும். NFTE-BSNL கோவை மாவட்ட செயலருக்கு  ஒற்றுமையை வலிறுத்தி அவரது மாநிலச்செயலர் மற்றும் அகில இந்திய பொதுச்செயலர் ஆகியோரின் உரையை முன்னதாக கூறியிருந்தோம்.ஆனால் அவரது செயல்பாடு மாறவில்லை. மாறி இருந்தால் இப்பொழுது கோவை  மாவட்ட NFTE BSNL மாவட்டசெயலர் மீது அவரது கிளைச்செயலர்கள் நம்பிக்கை இல்லாத்தீர்மானம் போட்டிருக்க மாட்டார்கள். இனியாவது மாற வேண்டும் என்று தோழமை உணர்வுடன் கேட்டுக்கொள்கின்றோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக