தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

விரிவடைந்த மத்திய செயற்குழு துவங்கியது

நமது மத்திய சங்கத்தின் விரிவடைந்த மத்திய செயற்குழு கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம், அஹமத் நகரில் இன்று, 19.02.2016 எழுச்சியுடன் துவங்கியது. 

முதல் நிகழ்வாக தேசிய கொடியை, நமது அகில இந்திய தலைவர், தோழர் பல்பீர் சிங் ஏற்றி வைத்தார். சங்க கொடியை நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, வின்னதிரும் கோஷங்களுக்கிடையே, ஏற்றி வைத்தார். 

நமது சங்க புரவலர் தோழர் V .A .N .நம்பூதிரி, முன்னிலை வகிக்க, தியாகிகள் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தியாகிகள் நினைவு ஸ்துபிக்கு வீர வணக்கம் செலுத்திய பின், நிகழ்வுகள் துவங்கின. 

நாடு முழுவதுலுமிருந்து மாவட்ட செயலர்கள் அனைத்து மாநிலத்திலுமிருந்து இந்நிகழ்வில், கலந்து கொள்கின்றனர். நமது மாவட்டம் சார்பாக, மாவட்ட செயலர்,
தோழர் சி.ராஜேந்திரன், செயற்குழுவில் பங்கேற்கிறார். 

சார்பாளர் விவாதம் துவங்கி, நடைப்பெற்று வருகிறது. 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக