தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 9 ஜனவரி, 2016

கோவையில் ஜாதா

FORUM அமைப்பின் தாரக மந்திரமான   SERVICE WITH A SMAILE " புன்னகையுடன் சேவை" என்பதை பொது மக்களுக்கு வெளிப்படுத்தும் பேரணியின்  துவக்க நிகழ்ச்சி  கோவை ரேஸ்கோர்ஸ் தொலைபேசிநிலையத்தில் FORUM தலைவர் தோழர் எல்.சுப்பராயன் தலைமையில்நடந்தது.கன்வீனர் தோழர் சி.ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.நிர்வாகத்தரப்பில் முதன்மைப் பொது மேலாளர் திரு சிவராஜ், துனைப்பொது மேலாளர் திரு.ரத்தினசாமி,DGM(ADMN) மற்றும் தோழர்கள் BSNLEU V.வெங்கட்ராமன், மாரிமுத்து, NFTE-BSNL ராமகிருஷ்னன், ராபர்ட்ஸ், FNTO செளந்திரராஜன், ATP அன்புதாஸ் உள்ளிட்ட அனைத்து சங்க தலைவர்களும் உரையாற்றினர்.கோவை மாவட்ட முதன்மைப் பொது மேலாளர் திரு சிவராஜ் சிறப்புரை ஆற்றி கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.SNEA சங்க மாநிலச் செயலர் தோழர் ராஜசேகர் சிறப்புரை நிகழ்த்தினார்.பேரணியின்  முடிவில் LIC  ஊழியர் சங்கத்தின் நிர்வாகி தோழியர் எம்.கிரிஜா அவர்கள் வாழ்த்தி பேசினார். SNEA சங்க மாவட்டச் செயலர் தோழர் பிரசன்னன் நன்றியுரை ஆற்றினார்.பேரணியில் அதிகாரிகள்,ஊழியர்கள் உள்ளிட்ட 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.பேரணியை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக