தற்காலிக PLI போனஸ் வழங்கக்கோரி FORUM சங்கங்கள் விடுத்த அறைகூவலின்படி இன்று மாவட்டம்
முழுவதும் FORUM சங்கங்கள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் அனைத்து கிளைகளிலும் திரளாக தோழர்கள் கலந்து
கொண்டனர் .கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு NFTE BSNL கிளைச்செயலர். தோழியர்.L.D தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி BSNLEU மாவட்டச்செயலர்.தோழர்.சி.ராஜேந்திரன்,NFTE BSNL மாவட்டத்தலைவர் தோழர்.ராபர்ட்ஸ், மத்திய சங்க
பொறுப்பாளர்.தோழர்.எஸ்.எஸ்.கோபாலகிருஷ்ணன், BSNLMS மாவட்டச்செயலர்.தோழர். வரதராஜன், SNEA மாவட்டச்செயலர். தோழர்.பிரசன்னா ஆகியோர்
பேசினார்கள். BSNLEU சென்ட்ரல் கிளைச்செயலர்
தோழர்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறி முடித்து வைத்தார். 100க்கும் மேற்பட்ட தோழர்கள்
கலந்து கொண்டனர்.
திருப்பூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தோழர்கள்
கலந்து கொண்டனர்.
பல்லடம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்புச்செயலர்.தோழர். முகமது ஜாபர்
கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார்.30க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
டெலிகாம் பில்டிங்கில் நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்தில் 65 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்
பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து
கொண்டனர்.
உடுமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து
கொண்டனர்
மதுக்கரை ,குறிச்சி,போத்தனூர் கிளைகளின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50
க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்
ராமநாதபுரம் கிளையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட தோழர்கள்
கலந்து கொண்டனர்.
சாய்பாபா காலனி கிளையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட
தோழர்கள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக