தோழர் KC ஓய்வு பெற்றார்.
KC என்று நம்மால் தோழமையோடு அழைக்கப்படும் நமது மாவட்டத்தலைவர்
தோழர் கே.சந்திரசேகரன் 31-8-2015 அன்று பணி ஓய்வு பெற்றார். 1975ல் DOT யில் காசுவல் ஊழயராக வாழ்க்கையை துவங்கிய
தோழர் KC 1982 ல் RM
ஆக நிரந்தரம் பெற்றார். பின்னர் 1994 ல் TM ஆக
பதவி உயர்வு பெற்றார்.முந்தைய கோவை DMT
யில் கிளைச்செயலராக பின்னர் மாநில பொருளராக பல் வேறு தொழிற்சங்கப்
பொறுப்புக்களில் திறம் பட பணியாற்றினார். கோவை மாவட்டத்தில் லைன்ஸ்டாப் சங்கத்தில்
பெரும் ஸ்தாபன பிரச்சினகள் வந்தபோது
நியாயமான நிலைப்பாட்டில் நின்று இயக்கத்தை காத்து நிற்பதில் பெரும் பங்காற்றினார்.
பின்னர் BSNL ஆக மாறியபின் பல்வேறு பொறுப்புக்களை
அலங்கரித்தவர். சங்க வேலைகள் மட்டுமன்றி திறமையான ஊழியர். மேளாக்கள் பலவற்றை நடத்தி
BSNL ஐ பாதுகாப்பதில் முன்னிலை வகித்தார். ஓய்வு பெறும் போது BSNLEU வின் மாவட்டத்தலைவராக சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றார். கடந்த மாதம்
கோவையில் விரிவடைந்த மாநில செயற்குழுவை ஒட்டி நடந்த சிறப்புக்கூட்டத்தில்
பொதுச்செயலர் தோழர் அபிமன்யு , தோழர் KC அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.
அந்த அத்தனை பாரட்டுக்களுக்கும் உரியவர் தோழர் KC. அவர்தம் ஓய்வுக் காலம் பயனதுள்ளதாக அமைய
வாழ்த்துகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக