தோழர்களே !
நாடு ஒரு மிகப்பெரிய வேலைநிறுத்தத்தை சந்திக்க இருக்கிறது.நமது அகில இந்திய தலைவர்கள்,மாநில தலைவர்கள் மற்றும் மாவட்டத்தலைவர்கள் நாடும் முழுவதும் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க தீவிரமாக பணியாற்றிவருகிறார்கள்.இந்த நிலையில் ஊழியர்களின் மத்தியில் பிளவை உண்டாக்கும் வகையில்,ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தன் நடவடிக்கைகளை திட்டமிட்டு செய்லாற்றி வருகிறது. கோவை மாவட்ட NFTE BSNL சங்கம் .வட்டிக்குறைப்பு என்ற கோரிக்கை சங்க வித்தியாசமில்லாமல் அனைத்து உறுப்பினர்களின் நலனுக்காக வைக்கப்பட்டது.அதனால் தான் 1000க்கும் மேற்பட்ட தோழர்கள் சொசைட்டி நிர்வாகத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் தங்கள் பங்களிப்பை செய்துள்ளார்கள்.வட்டிகுறைப்பு மட்டுமல்லா சொசைட்டியை பாதுகாக்க வல்லவர்கள் BSNLEU தலைவர்களே என்று கோவையிலே 100 சதவித வெற்றியை அளித்தது சங்க வித்தியாசமில்லாமல் வாக்களித்த உறுப்பினர்களே. NFTE யின் மாவட்ட சங்கத்தின் கருத்தை NFTE யிலேயே இருக்கும் நல்ல மனம் கொண்டவர்களே ஏற்றுகொள்ளவில்லை. என்பதை அதன் மாவட்ட சங்கம் நன்கறியும் . சொசைட்டியையும், BSNL யையும் பாதுகாக்கும் வல்லமை BSNLEU வுக்கு மட்டுமே உண்டு. செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்பதன் மூலமும், மற்றவர்களை முழுமையாக பங்கேற்க செய்வதன் மூலம் கோவை மாவட்ட BSNLEU சங்கம் இதை நிரூபித்து காட்டும்..விமர்சனங்கள் தொடர்ந்தால் வேலைநிறுத்தத்திற்குப்பின் சரியான பதிலடி சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக