தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 25 மார்ச், 2015

காத்திருப்பு போராட்டம்



ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கிடக்கோரியும் ,நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்கிடக்கோரியும் கடந்த 11-03-2015 அன்று நிர்வாகத்திடம் கடிதம் தந்தோம்.ஆனால் கடிதம் தந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் நிர்வாகம் எவ்வித பதிலும் தரமால் இழுத்தடித்து வருகிறது. இதற்கிடையே முறையே 2, 4, 6 மணி நேரங்கள் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஒப்பந்தத்தை  இதுவரை நீட்டிப்பு செய்யாமல் காலந்தாழ்த்தி வருகிறது. இது மேலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகின்றது. அது மட்டுமல்லாமல் ஒப்பந்த ஊழியர்களை பல்வேறு இடங்களுக்கு இடமாறுதல்கள் செய்யும் வேலையை நிர்வாகம் தன்னிச்சையாக செய்து வருவது ஒப்பந்த ஊழியர்களிடையே ஒரு வித அச்சமூட்டும் செயலாக மாறிவருகிறது.முறையாக ஊதியம் வழங்காமல் ஊதியம் கேட்கும் தொழிலாளிகளை மிரட்டும் விதத்தில் நடத்தும் நிர்வாகத்தை கண்டித்து நாளை PGM  அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற இருக்கின்றது.இதற்கிடையே நமது சங்கத்தின் நிர்வாகிகளை நாளை 26-03-2015 அன்று  பேச்சுவார்த்தைக்கு நிர்வாகம் அழைத்து உள்ளது. இதில் சுமூக மாற்றம் அடையும்  என்று நம்புகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக