பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு
இலவசமாக ஸ்பெக்டரம் ஒதுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் நிறுவனத்திலுள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். மாதக்கணக்கில் நிரப்பப்படாமல் உள்ளசிஎம்டிஉள்ளிட்ட இரண்டு இயக்குநர் பதவிகளை
உடனடியாக
நிரப்பிடவேண்டும்.
துணை டவர் நிறுவனத்தின் உருவாக்கத்தை கைவிட வேண்டும்.
கிராமப்புற தரைவழி தொலை தொடர்பு சேவைகள் கொடுப்பதால் ஏற்படும் நஷ்டத்தினை
போதுமான வகையில் ஈடுகட்ட வேண்டும். மத்திய, மாநில
அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறைகள் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்துவது
என்பதை கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்
சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் செவ்வாயன்று 2 ம்
நாளாக பொள்ளாச்சியில் பிஎஸ்என்எல்கோட்டப்பொறியாளார் அலுவலகத்தில்
தர்ணா போராட்டம் நடைபெற்றது.பிஎஸ்என்எல் அனைத்து சங்க கூட்டமைப்பின்
சார்பில் பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற
போராட்டத்திற்கு ஆர்.நடராஜன், வி,சசிதரன் ஆகியோர் தலைமை தாங்கினர். பிஎஸ்என்எல்
ஊழியர் சங்கத்தின்மாநில செயலர் .தோழர்.பாபுராதாகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.ராஜேந்திரன், ஆர்.
பிரபாகரன், மணி, ஆர்.சேதுராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப்
பேசினர். இந்தஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை
வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக