தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 24 டிசம்பர், 2014

நிர்வாகத்துடன் JAC சந்திப்பு

DGM [ADMN ] உடன் இன்று  JAC  தலைவர்கள்  அவினாசி தோழர் .கனேசன் சஸ்பெண்ட சம்பந்தமாக சந்தித்து பேசினார்கள்.அப்பொழுது ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே தற்போது அவிநாசியில் நடைபெற்றும் வரும் நிகழ்வுகள் யாருக்கும் பயளளிக்காது. மேலும் நம் சேவை தான் பாதிக்கின்றது.இத்தகைய போக்கை மாற்றி சுமுக உறவை மேற்கொண்டால் மட்டுமே நமது சேவையின் தரத்தையும், அதிகாரிகள் – ஊழியர்கள் ஒற்றுமையும் கட்டிக்காக்கப்பட்டும் என்று வலியுறுத்தினோம். நிர்வாகமும் இத்தகைய போக்குகள் இனிமேல் நடைபெறாமல்  இருக்க அவினாசியில்  நிர்வாகமும், JAC சங்கங்களும் இணைந்து  விரைவில் அதிகாரிகள் –ஊழியர்கள் இணைந்த ஒரு கூட்டத்தை கூட்டி ஒற்றுமையை  ஏற்படுத்துவதுடன் , அங்கு சேவையை மேம்படுத்த இருதரப்பு ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்று  JAC தலைவர்களை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் அவினாசி தோழர் கணேசனின் சஸ்பெண்ட் உத்திரவை ரத்து செய்தும் உத்தரவு இட்டுள்ளது. .இப்பிரச்சனையை சுமுகமாக தீர்க்க உதவிய நிர்வாகத்திற்கும், அதிகாரிகள் சங்கத்தினருக்கும், போராட்டத்தில் பங்கேற்ற அவினாசி தோழர்களுக்கும், ஆதரவளித்த அனைத்து பகுதி தோழர்களுக்கும் ,  கோவை மாவட்ட  JAC தலைமை நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக