தோழர் கே.ஜி.போஸ் அவர்களின் 40 வது நினைவு நாளை முன்னிட்டு கோவையில் அனைத்து கிளைகளிலும் அவ்ரது உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி கடைபிடிக்கப்பட்டது.
ராமநாதபுரம், திருப்பூர், பல்லடம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, கிளைகளில் காலையிலும். மாலை 5 மணிக்கு கோவை சாய்பாபா காலனி மனமகிழ் மன்றத்தில் ஒரு சிறப்புக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் மாவட்ட்டத்தலைவர் தலைமையேற்க , மாவட்ட செயலர். தோழர்.சி.ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். பின்பு தபால் தந்தி சங்கத்தின் முன்னனி தோழரும் தமுஎகச வின் முன்னனி பேச்சாளரும் தோழர். திருமூர்த்தி அவர்கள் கே.ஜி.போஸின் போராட்ட வாழ்க்கையினை அனைத்து தோழர்களுக்கும் சிறப்பாக எடுத்துக்கூறி கே.ஜி.போஸின் நினைவுகளை எடுத்துக்கூறினார். இறுதியாக சாய்பாபா காலனி கிளையின் பொருளாளர் தோழர். கருணாகரன் நன்றி கூறி முடித்து வைத்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக