தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

இன்சூரன்ஸ் துறையை சீரழிக்கும் முடிவை கைவிடுக மத்திய அரசை கண்டித்து கோவையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்





-இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதித்து பொதுத்துறையை சீரழிக்கும் மத்திய அரசை கண்டித்துபல்வேறு அமைப்புகளின் சார்பில் கோவையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை 26 சதவிகிதத்தில் இருந்து 49 சதவிகிதம் உயர்த்தி பொதுத்துறையை சீரழிக்கும் முயற்சிக்கும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் செவ்வாயன்று சிஐடியு, இன்சூரன்ஸ், வங்கி, அரசு ஊழியர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், வாலிபர், மாதர், மாணவர், விவசாயிகள் சங்கம், விவசாயதொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.சுரேஷ், வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் ஆர்.மகேஷ்வரன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் சி.ராஜேந்திரன், அரசு ஊழியர் சங்கத்தின் செயலாளர் குமார், வாலிபர் சங்கத்தின் சார்பில் கே.எஸ்.கனகராஜ், மாதர் சங்கத்தின் சார்பில் புனிதா, மாணவர் சங்கத்தின் செயலாளர் தீபக்சந்திரகாந்த் மற்றும் இன்சூரன்ஸ் துறையின் ஜி.சுதா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக