14-08-2014 அன்று நடந்த திருப்பூர் கிளைகள் இணைந்த மாநாட்டில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திருப்பூர் மெயின் கிளை நிர்வாகிகள்
தலைவர் : தோழர்.
வாலீசன்
செயலர் : தோழர். குமாரவேல்
பொருளர் : தோழர். ஸ்ரீநாத்
திருப்பூர்
EXTNL கிளை நிர்வாகிகள்
தலைவர் : தோழர்.சுப்பிரமணியம்
செயலர்
: தோழர்.விஸ்வநாதன்
பொருளர் : தோழர்.தண்டபாணி
திருப்பூர் பி.பி.புதூர் கிளை நிர்வாகிகள்
தலைவர் : தோழர்.உன்னிக்கிருஷ்ணன்
செயலர் : தோழர்.அண்ணாதுரை
பொருளர் : தோழர்.பழனிச்சாமி
திருப்பூர் கே.பி.புதூர் கிளை நிர்வாகிகள்
தலைவர் : தோழர்.வின்செண்ட்
செயலர் : தோழர்.ஜோதீஸ்
பொருளர் : தோழர்.அற்புதராஜ்
மாநாட்டில் நடந்த சேவை
கருத்தரங்கில் திரு . ராமசாமி, DGM, மற்றும் மாநில உதவிச்செயலர். தோழர்.S.சுப்பிரமணியம்.தொகுப்புரை
நிகழ்த்தினார்கள். திருப்பூர் கோட்டப்பொறியாளர். திருமதி.வளர்மதி, பி.பி.புதூர்
கோட்டப்பொறியாளர் திருமதி. பழனியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் அகில
இந்திய வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர். முத்துக்கண்ணன் பங்கேற்று
வாழ்த்துரை வழங்கினார் . மாநில தலைவர் தோழர்.K.மாரிமுத்து, , மாவட்டச்செயலர். தோழர். சி.ராஜேந்திரன் சிறப்புரை நிகழ்த்தினார், அப்பொழுது மாவட்ட மாநாட்டிற்கான நன்கொடை ரூ.35,000 ஐ கோட்டா முழுவதையும் பூர்த்தி செய்து
கிளைச்செயலர்கள் மாவட்டச்செயலர். தோழர். சி.ராஜேந்திரனிடம் அளித்தனர்.மாநில அமைப்புச்செயலர் தோழர்.முகமதுஜாபர், மாவட்ட தலைவர் தோழர். கே.சந்திரசேகரன் , மாவட்டச்சங்க நிர்வாகிகள் N.சக்திவேல், N.ராமசாமி N.P.
ராஜேந்திரன், நிசார் அகமது, M.காந்தி, , M.முருகசாமி,M.சதீஸ், மற்றும் ஒப்பந்த ஊழியர்
சங்கத்தின் மாவட்டசெயலர். தோழர்.ரவிச்சந்திரன், மாவட்டத்தலைவர் தோழர். முத்துக்குமார், FNTO சங்க நிர்வாகி தோழர். தனபதி ஆகியோர் கலந்து
கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டில் +2 மற்றும் 10 ம் வகுப்பு தேர்வில் அதிக
மதிப்பெண்கள் எடுத்த நம் தோழர், தோழியர்களின் குழந்தைகளுக்கு அவர்களின் சார்பாக
பெற்றோர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. மாநாட்டில் ஒய்வு பெற்ற தோழர்களுக்கு சால்வை
அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகளுக்கு மாவட்டச்சங்கத்தின்
சார்பில் வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக