தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 6 ஜூலை, 2014

பதவி உயர்வு பெற இருக்கும் ஊழியர்களை பழிவாங்கும் நோக்கத்தை கைவிடு பிஎல்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பதவி உயர்வு பெற இருக்கும் ஊழியர்களை பழிவாங்கும் நோக்கத்தில் தாமதப்படுத்தை நிறுத்தவேண்டும் உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஊழியர்களின் இடமாற்றம் சம்பந்தமான பேச்சுவார்த்தை முடிந்த பின்னரும் அதை நடைமுறைப்படுத்தாமல் காலதாமதம் செய்வதை கண்டித்தும், வாடிக்கையாளர் சேவை மையத்தில் ஆள்பற்றாக்குறை உள்ளதால் பொதுமக்களுக்கு சேவைதடைபடுவதை நிவர்த்தி செய்ய ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். பதவி உயர்வு பெற இருக்கும் ஊழியர்களை பழிவாங்கும் நோக்கத்தில் தாமதப்படுத்துவதைக் கண்டித்தும், மத்தியஅரசின் டீசல்,பெட்ரோல் ரயில் கட்டணஉயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க ஜெயமணி தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர்சங்கத்தின் செயலர் பிரபாகரன் துவக்கவுரையாற்றினார். உதவி செயலர் மனோகரன், மலைச்சாமி ஆகியோர் விளக்கவுரையாற்றினார். இறுதியில் ஒப்பந்த தொழிலாளர் யூனியன் மாவட்ட அமைப்பு செயலாளர் ராமச்சந்திரன் நன்றியுரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக