தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 5 ஜூலை, 2014

தேங்கிய பிரச்சனைகளைத் தீர்த்திடுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்






திருப்பூர்

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தேங்கிக்கிடக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் தமிழ்மாநிலசங்கம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் மாநில சங்கம் ஆகியவை சார்பில் மாநிலம் முழுவதும்  ஆர்ப்பாட்டம்  நடைபெற அறைகூவல் விடுத்து இருந்தது.
மருத்துவ சேவை அட்டைகள் தருவதில்லை, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை இல்லாத மாவட்டங்களில் மருத்துவ வசதி பெறுவதில் உள்ளசிரமங்களைக் களைய வேண்டும், ஊழியர் மற்றும் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளைநிறைவேற்ற உரிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும்உள்ளிட்ட நெடுநாள் தீர்க்கப்படாத கோரிக்கைகள், பிரச்சனைகளை விரைந்து தீர்த்திட வலியுறுத்தி மாநில அளவில் வெள்ளியன்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடர்புஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
இதன்ஒரு பகுதியாக, திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக பிற்பகல் உணவு இடைவேளையில் நடைபெற்றஇந்த ஆர்ப்பாட்டத்துக்குபிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைத் தலைவர் வாலீசன் தலைமைவகித்தார். இதில் தமிழ்நாடுதொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சி.வினோத்குமார் சிறப்புரைஆற்றினார். பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் முகமது ஜாபர் கோரிக்கைகளை வலியுறுத்திப்பேசினார். இதில் நிறுவன ஊழியர்களும், ஒப்பந்தத் தொழிலாளர்களும் திரளானனோர் கலந்து கொண்டனர்.

பல்லடம்

பல்லடம் தொலைப்பேசி நிலையம் முன்பாக நடைபெற்றஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி செல்வராஜ் மற்றும் வீரேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். மேலும்,வெள்ளிங்கிரி, காந்தி, சண்முகசுந்திரம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாகராதாகிருஷ்னன் நன்றியுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 5 பெண்கள் உட்பட30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

கோவை

கோவை சாய்பாபா காலனிதொலைப்பேசி நிலையம்முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை நிர்வாகிகள் என்.அன்பழகன், சுந்தரராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட அமைப்புச் செயலாளர் கே.சந்திரசேகரன், மாவட்டஅமைப்புச் செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நிறைவாக வி. கருணாகரன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில்சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதே போல் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம்,அவினாசி, உடுமலை,கோவை மெயின் ,டெலிகாம் பில்டிங் ,குறிச்சி,ராமநாதபுரம் பகுதிகளில் திரளான தோழர்கள் ஆர்ப்பாட்ட்த்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக