தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 30 ஜூலை, 2014

புதிய கிளை நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்



30--07-2014 அன்று நடந்த  பொள்ளாச்சி கிளைமாநாட்டில் பொள்ளாச்சி கிளையை  பிரித்து பொள்ளாச்சி கிளை மற்றும் ஆனைமலை கிளை என்று இரண்டு கிளைகளுக்கு கிளை மாநாடு நடந்தது. மாநாட்டில்   “ பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி  மற்றும்  டெலாய்ட்டி கமிட்டியின் பரிந்துரையும் அதன் பாதகங்களும் என்ற தலைப்பில் நடந்த சேவை கருத்தரங்கில் மாநில துனணத்தலைவர்  தோழர் வி.வெங்கட்ராமன்  தொகுப்புரை நிகழ்த்தினார் .,மாவட்டச்செயலர். தோழர்.சி.ராஜேந்திரன்  துவக்கஉரை நிகழ்த்தினார், பின்பு நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் பொள்ளாச்சி கிளைக்கு   தோழர் M.ஜெயமோனி, அவர்கள் கிளைத் தலைவராகவும், தோழர்.R.பிரபாகரன், அவர்கள் கிளைச்செயலராகவும், தோழர். P. தங்கமணி, அவர்கள்  கிளைப் பொருளாளராகவும் தேர்தெடுக்கப்பட்டனர்.  ஆனைமலை  கிளைக்கு   தோழர் ஆறுமுகம், அவர்கள் கிளைத் தலைவராகவும், தோழர்.S.மனோகரன், அவர்கள் கிளைச்செயலராகவும், தோழர். S.ஆனந்தன், அவர்கள்  கிளைப் பொருளாளராகவும் தேர்தெடுக்கப்பட்டனர் மாவட்டச்சங்க நிர்வாகிகள் , N.சக்திவேல், N.P. ராஜேந்திரன், R.ராஜசேகரன், P. தங்கமணி , ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டசெயலர். தோழர்.T.ரவிச்சந்திரன், மற்றும் தோழாமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு  புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர்



 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக