தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 21 மே, 2014

பாராட்டுக்கள்

திருப்பூர் வீரபாண்டி தொலைபேசிநிலையத்திற்கு உட்பட்ட கணபதிபாளையம் பகுதியில்  தனியார் நிறுவனத்திற்கு குடிநீர் குழாய் பதிப்பதற்காக பொக்லைன் இயந்திரம் மூலமாக குழிகள்  தோண்டிய போது   நமது நிறுவனத்திற்கு எவ்வித முன்னறிவிப்பும்  தராமல்  நமது கேபிள்களை  வெட்டி விட்டார்கள்.இதை கண்டித்த நமது தோழர்கள் அந்த ஒப்பந்த தாரரிடம்விவாதம் செய்து, நிர்வாகத்திற்கு தகவல் தந்து , நஷ்ட ஈடாக ரூ. 10,000 /- [ பத்தாயிரம் ]- ஐ  செலுத்த வைத்தனர். தோழர்களின் இத்தகைய செயல்களையும், அவர்களுக்கு துணையாக இருந்த வீரபாண்டி தொலைபேசி நிலைய துணைக்கோட்டப்பொறியாளர் அவர்களையும், பல்லடம் கோட்டப்பொறியாளர் அவர்களையும்  மாவட்டசங்கம் பாராட்டுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக